எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இஸ்லாமியர்கள் இப்போது மிக தீவிரமாக தங்கள் மதத்துக்கு பலவிதமுறைகளில் ஆட்களை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேரளா மனேரமா தினசரி செய்திதாள்களும், டிவி செய்திகளும் கூறுகிறது. கிறிஸ்தவ பெண்களை காதலிப்பது அல்லது ஆண்களை காதலிப்பது பண ஆசைகாட்டுவது இப்படி பலவகைகளில் அவர்களை வீழ்த்தி திருமணம் செய்து மதத்தில் சேர்ப்பது மட்டுமல்ல, வேறு சில திட்டங்களின் மூலமாகவும் தீவிரமாக செயல்படுகிறார்கள்.

ஆங்காங்கு இஸ்லாம் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி கிறிஸ்தவர்களை வாக்குவாதத்துக்கு அழைக்கிறார்கள். அறைக்குறை கிறிஸ்தவ ஊழியர்கள் ஜம்பமாக அவர்கள் அழைப்புக்கு இணங்கி அவமானப்பட்டு திரும்புகிறார்கள். அதை இஸ்லாமியர்கள் தங்கள் பத்திரிக்கைகளில் புகைப்படத்துடன் வெளியிட்டு பெருமைப்பட்டு கொள்கிறார்கள்.

சமீபத்தில் கும்பகோணத்திலும், வேறு சில இடங்களிலும் இப்படிப்பட்ட கூட்டங்களை ஏற்பாடு செய்து கிறிஸ்தவர்களை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி வரும் கிறிஸ்தவர்களோடு உன்னதப்பாட்டு புத்தகத்தை வாசிக்க சொல்லி இப்படி ஆபாசமாக எழுதப்பட்ட புத்தகத்தை பெண்கள்கூட படிக்க கூச்சப்படும் அளவுள்ள, அந்த புத்தகத்தை பரிசுத்த வேதாகமம் என்று எப்படி கூறமுடியும் என்று கேட்டபோது அந்த கிறிஸ்தவ ஊழியர்கள் வெட்கப்பட்டு போனார்கள் என்று தங்கள் பத்திரிக்கையில் எழுதி மகிழ்கிறார்கள்.

ஒரு இடத்தில் மத்தேயு சுவிசேஷத்தில் இயேசு சொன்னார். நான் சமாதானத்தை உண்டாக்க வரவில்லை பிரிவினை உண்டாக்கவே நான் வந்தேன் என்ற வசனத்தை இவர்கள் சுட்டிக் காட்டியபோது அந்த பாதிரியார் அப்படி ஒரு வசனம் இருக்கிறதா எங்கே காட்டுங்கள்? என்று வாங்கி வாசித்து வியந்து தலை கவிழ்ந்துபோனார் என்று எழுதி மிகவும் மகிழ்ந்திருக்கிறார்கள்.

  கிறிஸ்தவ ஊழியர்களுக்கே பைபிளை எப்படி வாசிப்பது என்றும் ஒரு வசனத்தை எப்படி விளங்கிக்கொள்ளவேண்டும் என்றும் தெரியாதநிலையில் இருக்கிறார்கள். அப்படி சிலர் பாதிரியாராகவும், கிறிஸ்தவராகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாக்கு வாதத்துக்கு என்று இவர்கள் இப்படிப்பட்ட வசனங்களை பொறுக்கி தேடி எடுத்து அறைகுறை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து திணறடித்ததாக இவர்கள் பெருமைபடுவதில் ஆச்சரியம் இல்லையே.

சமாதானத்தின் தேவனாகிய இயேசுகிறிஸ்து பிரிவினை உண்டாக்க வந்தேன் என்று ஏன் கூறினார்? அந்த சூழ்நிலை என்ன? Concept என்ன? யார் யாருக்கும் பிரிவினை, அந்த பிரிவினையின் அர்த்தம் என்ன? என்பதை எல்லாம் மேலோட்டமாக வாசித்தால், நிச்சயம் இயேசுவின் உபதேசத்தையே தவறு என்றுதான் எண்ணத்தோன்றும் - இதற்காகத்தான் வசனத்தை எப்படி வாசிக்கவேண்டும். அந்த வசனம் எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது, சரித்திர சூழ்நிலை என்ன? என்றெல்லாம் அறியாமல் வேத வசனத்தை வாசித்து அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சிக்கக்கூடாது. அப்படி மேலோட்டமாக வாசிக்க வேதம் ஒரு கதை புத்தகம் அல்ல!

  இஸ்லாமில் (ஜிகாத்) பரிசுத்த யுத்தம் என்ற பெயரில் நடத்தப்படும் தீவிரவாத கொலைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி ஜிகாத் கொலை செய்தால் கொலை செய்தவனுக்கு கிடைக்கும் பரிசுகள் என்ன என்பதைப்பற்றி இஸ்லாமில் உள்ளவர்களிலேயே ஒரு பிரிவினர் அதை தவறாக அர்த்தப்படுத்தி, அதன் காரணமாக ஈவு இரக்கமில்லாமல் எந்த கொலையும் செய்ய தயங்குவதில்லை. ஜிகாத் எழுதப்பட்ட சூழ்நிலை Concept என்ன என்று விளங்கிக்கொள்ளாமல்போனதால்தான் உலகெங்கும் மத தீவிரவாதிகளால் பல கொலைகள், பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் சிறிதும் இரக்கம் இல்லாமல் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இதனால் உண்மையான இஸ்லாமிய குடும்பங்கள், இஸ்லாமிய மக்கள் எத்தனையாய் வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்! ஒரு சிலர் குரானை தவறாக புரிந்துக் கொண்டதன் விளைவாகத்தான் முஸ்லீம் மக்களின் பிள்ளைகளின் படிப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வியாபார வளர்ச்சி எல்லாம் முடக்கப்பட்ட நிலையில் மிக மனவேதனையுடன் காணப்படுகிறார்கள். பிழையான இஸ்லாமிய கூட்டத்தினரின் தவறான அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட உலகெங்கும் உள்ள இஸ்லாமிய தோழர்கள் இப்போதும் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் முக்கிய காரணம் தாங்கள் மிகவும் மதிக்கும் குரானை சிலர் சரியாக புரிந்துக்கொள்ளாததே? ஆகும். அதனால் ஏற்பட்ட விளைவை நாம் கண்கூடாக பார்க்கிறோமே!.

  என் வெளிநாட்டு பயணங்களில் விமான நிலையத்தில் என்னோடு பயணம் செய்த சிலரின் பாஸ்போர்ட்டில் இஸ்லாம் பெயரை கண்டவுடன் அவர்களை தனித்து நிற்க வைத்து விடுகின்றனர். அதனால் இஸ்லாமிய சகோதரிகள் பட்ட அவமானங்களை நானே பல நாடுகளில் என் பயணத்தில் கண்டு வேதனைப்பட்டிருக்கிறேன். அவர்கள் விமானத்தில் ஏறி அமர்ந்தாலும் எல்லாரும் சந்தேக கண்கொண்டே அவர்களை பார்ப்பதைக்காணும்போது அவர்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை உணரவேண்டும். இத்தனைக்கும் காரணம் யார்? கிறிஸ்தவர்களோ, இந்து மதத்தினரோ அல்ல, இஸ்லாமியர்களுக்குள்ளே ஒரு பிரிவினர்தான் இப்பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம். அவர்கள் மீதும் தவறு கூறமுடியாது. குரானை அவர்களுக்கு போதித்தவர்கள் குறிப்பிட்ட (சூராவுக்கு) வசனத்துக்கு தவறான விளக்கம் கொடுத்ததுதான் காரணமாகும்.

முகமது நபி அவர்கள் மதினாவில் இருந்த காலத்தின் சூழ்நிலை, மக்காவுக்கு சென்றபின் அங்கு வாழ்ந்த மக்களிடம் பழகின சூழ்நிலை வேறு. அங்கு பழகிய ஆட்கள் வேறு, அங்கு முகமது நபி அவர்கள் படித்துகொண்ட விஷயங்களும் வித்தியாசமானதாகும். அதன்பின் எழுதப்பட்ட குரானின் சூழ்நிலை இவை யாவும் இஸ்லாமில் உள்ள பெரும்பாலானவர்களே அறியவில்லை.

  அதுபோலவே கிறிஸ்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் பெயர் கிறிஸ்தவர்களாக இருப்பதாலும் வேதத்தை சரியாக படிக்காத நிலையில் இருப்பதாலும் இவர்கள் தங்கள் வாழ்க்கையையும் சரியாக அமைத்துக் கொள்ளாமல் இப்படிப்பட்ட வேண்டாத வாக்கு வாதங்களுக்குள் அகப்பட்டு எல்லாம் தெரிந்தவர்களைப்போல் அங்கு சென்று அவமானப்பட்டு திரும்புகிறார்கள். இப்படிப்பட்ட வாக்குவாத்தில் கிறிஸ்தவர்கள் தலையிடக்கூடாது.

ஒருவன் வாக்குவாதஞ் செய்ய மனதாயிருந்தால் எங்களுக்கும் தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கம் இல்லை.................. 1 கொரி 11:16 என்று நம் வேதம் திட்டவட்டமாக போதிக்கிறது.

  இஸ்லாமிருக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிவிக்க பாரப்படுபவர்கள் முதலில் குரானை நன்றாக படியுங்கள். அது எழுதப்பட்டது எப்படி? முகமது நபி அவர்களின் வாழ்கையின் ஆரம்பம் என்ன? அவரின் திருமண வரலாறு, சரித்திர பின்னணி குரான் எழுதப்பட்ட விதம் இவைகளைப்பற்றியெல்லாம் அறியாமல் அவர்களிடம் பேச முயலக்கூடாது. மேலும் கிறிஸ்தவர்கள் தங்கள் வேதப் புத்தகத்தையே சரியாக படித்து தியானித்து சரியாக விளங்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆகவே இப்படிப்பட்டவர்கள் யாரிடமும் கிறிஸ்துவைப்பற்றி பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாமியர்களோ, RSSகாரர்களோ இப்படிப்பட்ட சம்பாஷனைக்கு அழைத்தால் தயவுசெய்து கிறிஸ்தவர்கள் யாரும் போகவேண்டாம். மேலே பவுல் கூறிய ஆலோசனையை வாசித்தீர்களா? அதன்படி அழைத்தவர்களுக்கு பதில் அளியுங்கள்.

தெரியாதவன் கேள்வி கேட்பான் அவனுக்கு பதில் அளிக்கலாம். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவன் கேள்வி கேட்டால் நாம் முட்டளாக்கப்படுவோம். வாக்குவாதம் செய்பவனுக்கு பதில் கூறக்கூடாது. காரணம், ஒத்துக்கொள்ள மனதில்லாததால்தான் அவன் வாக்குவாதத்தில் இறங்குகிறான் நாம் அவனிடம் பேசி பிரயோஜனமில்லை.


JESUS INVITES

இயேசு அழைக்கிறார் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் JESUS INVITES என்ற பெயரில் INTERNETல் சில இஸ்லாமிய சகோதரர்கள் சில புதிய நிகழ்ச்சிகளை ஆரம்பித்து அதில் நான் ஜாமக்காரனில் எழுதிய கிறிஸ்தவ சபைகளில் நடக்கும் ஊழல், CSI பெந்தேகோஸ்தே ஆகிய சபைகளின் சில உபதேச தவறுகளைக்குறித்தும், மற்றும் பிழையான கிறிஸ்தவ ஊழியங்களைக் குறித்தும் நான் விமர்சித்து எழுதியதில், தீதான விஷயங்களைமட்டும் இவர்கள் எடுத்து கிறிஸ்தவ ஊழியர்களின் ஊழல் - கிறிஸ்தவ சபைகளில் ஊழல் ஆகியவைகளை குறிப்பாக தெரிந்தெடுத்து கிறிஸ்தவர்களின் லட்சணம் பாரீர் என்று கிறிஸ்தவர்களை அவமானப்படுத்த இன்டர்நெட்டில் எழுத தொடங்கியுள்ளார்கள். கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவர்களையும் அவமானப்படுத்த குறிப்பாக ஜாமக்காரன் பத்திரிக்கை செய்தியை உபயோகிக்கிறார்கள். இதை வாசகர்களாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகிறேன்.

இதற்காக ஜாமக்காரனில் கிறிஸ்தவர்களைப்பற்றி இழிவாக எழுதும் பணியை நிறுத்துங்கள் என்று யாரும் எனக்கு ஆலோசனை கொடுக்கவேண்டாம். புறமதத்தில் உள்ள இப்படிப்பட்டவர்கள் ஜாமக்காரனை தவறாக உபயோகிக்க காரணமாகிறதே? இது அவிசுவாசிகளுக்கும் இடறலாக இருக்கிறதே? என்றெல்லாம் நீங்கள் கூறலாம் உண்மைதான். மறுக்கவில்லை!

முகமதியர்களும், இந்துமதத்தில் உள்ள RSS போன்றவர்களும் நம் கிறிஸ்தவ முழுவேத புத்தகத்தையும் வாங்கி தவறாக வியாக்கியனம் செய்கிறார்கள் என்பதற்காக வேத புத்தகத்தை அச்சடிக்காமல் இருக்கலாமா? யோசித்துப்பாருங்கள்! அதேபோலத்தான் மற்றவர்களுக்கு அவிசுவாசிகளுக்கு ஜாமக்காரன் செய்திகள் இடறலாக இருக்கிறது என்பதற்காக அதை நான் எழுதாமல் இருக்கலாமா? கூடாதே.

ஆகவே என் வாசகர்கள் மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய சகோதரர்களுக்காக, RSS போன்ற இயக்கங்களுக்காக ஜெபம் செய்யுங்கள். அவர்களை வெறுக்கவேண்டாம். அவர்களும் மனிதர்களே, மாத்திரமல்ல, அவர்களும் நமது சகோதரர்களே! அவர்களை நேசியுங்கள். அவர்களுக்காகவும் இயேசுகிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தியுள்ளார் என்பதை மறக்கவேண்டாம்.

சிலுவைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. 1 கொரி 1:18.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM