புது யுகம்: (9.10.2011 ஞாயிறு ஏஞ்சல் டிவியில் கண்டது)

பொய்யின் மொத்த வியாபாரிகளான ஏஞ்சல் டிவியில் கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் புதிய பொய் செய்தியை ஒளிப்பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

எச்சரிக்கை: புதிய யுகம் தோன்றிவிட்டது என்றும், உலக முடிவுக்கும் கிறிஸ்துவின் வருகைக்கும் நாள் குறித்து அறிவிக்க ஆரம்பித்துவிட்டனர். சகோ.சாது செல்வராஜ் - சகோ. வின்சென்ட் செல்வகுமாரின் இப்படிப்பட்ட கற்பனைகள் பெருகிக்கொண்டு டிவியை காண்பவர்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆக்கிக்கொண்டிருக்கின்றன. குழப்பம் உள்ளவர்கள் யாவரும் வேதத்தை சரியாக படிக்காதவர்களாகும். வேத ஞானம் இல்லாதவர்கள். ஆனால் உண்மை விசுவாசிகள் யாரும் அதை நம்பவில்லை என்பதை அவர்கள் தொலைப்பேசியில் என்னோடு பேசியபோதே அறிந்து தேவனைத்துதித்தேன். இவர்களின் ராமநாதபுரம் ஆலயம் திடீரென்று மூடப்பட்டதும், சபை ஜனங்கள் வேறுவேறு சபைகளுக்கு போய்விட்டதும், இப்போது மறுபடியும் ஒரு கட்டிடத்தை கட்டி அதை சபை ஆராதனை இடமாக கூறாமல் தீர்க்கதரிசன கட்டிடமாக இப்போது அறிவித்ததைக்குறித்து ராமநாதபுரம் சபை மக்களை விசாரித்தால் அங்கு சபையில் நடந்த விரும்பப்படாத விஷயங்களை கதைகதையாக அறிவிக்கிறார்கள்.

இராமநாதபுரம் ஆராதனையை டிவியில் காட்டினார்கள்.
ஓ போடும் நடிகரும், பாஸ்டருமான ராஜன்ஜான் என்பவரை கண்டேன். தேவ பிரசன்னம் இழந்து சினிமா கூத்தாக அந்த ஆராதனையை கண்டேன். அல்லோலுயாவுக்கு பதில் ஓ போட சொன்ன பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரை அன்றுதான் நேரில் கண்டேன். அங்கு கூடிய சபை மக்களும் அவர் பெற்றிருந்த அதே பொய்யான ஆவியை பெற்றிருந்ததால் போட்டார்கள். ஆனால் சுமார் 7 அல்லது 8 பேர் மட்டும் போடாமல் இருந்ததை டிவியில் கண்டேன். மற்ற எல்லாரும் போட்டு பாஸ்டர் எப்படி நடனம் ஆட கற்றுக்கொடுத்தாரோ அப்படியே வாலிபபெண்கள் முதல் கொண்டு வயது முதிர்ந்தவர்கள் வரை வெட்கம், மானம் இல்லாமல் போட்டு ஆடியதை கண்டபோது தேவ ஆவியானவர் ராமநாதபுரத்தை விட்டே ஓடிப்போயிருப்பார்.

பாடிய பாட்டும் - பாட்டில் அந்நியபாஷையும், பாஸ்டர்.ராஜன்ஜான் சொல்லி கொடுத்த அந்நியபாஷை பாட்டு தீனா மானா கமலக்கண்ணா, கானா மானா கரமணா இப்படி போகிறது அந்நியபாஷை பாட்டு மொழிபெயர்த்த அவரின் மகள் ஒரு கட்டத்தில் அவர் ஐந்து நட்சத்திர நீச்சல் குள உதாரணத்தை கூறும்போது அவள் முகம் சுளித்து அந்த ஆபாசத்தை மொழிபெயர்க்கவில்லை.

பாஸ்டர்.ராஜன்ஜான் அவர்கள் ஒரு கட்டத்தில் சிங்கம் கூட்டத்தின் நடுவே நின்றுக் கொண்டிருப்பதை காண்கிறேன். தேவதூதர்கள் கூட்டத்தில் உலாவிக்கொண்டிருப்பதை காண்கிறேன். இப்படி சாது சுந்தர் செல்வராஜ் கூறுகிறார். சகரி 13:3-5.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM