AOG விவகாரம்
நீங்கள் (ஜாமக்காரன்) திருந்தவேண்டும்

அடுத்த ஜாமக்காரன் வெளியீட்டில் நான் எழுதும் இந்த விவரம் வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் திருந்தவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் . . . . நீங்கள் பிரச்சனைகளை உருவாக்குகிறவர்களாக இராமல், பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்கிறவர்களாக இருப்பதே அவசியம். Do not be a problem maker; But be a problem solver.

  உங்கள் ஜாமக்காரன் செய்திகளை படிப்பதால் யாரும் இரட்சிக்கப்படுவதில்லை. எவருக்கும் பக்திவிருத்தியும் ஏற்படுவதில்லை. மாறாக உங்கள் எழுத்துக்கள் சுவிசேஷ ஊழிய தடைகளுக்கும், பக்திக்கேடான மனசஞ்சலங்களுக்கும் வித்திடுவதாகவே இருந்தது.

நீங்கள் பிறர் கண்ணில் இருக்கிற துரும்புகளை பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து, அவைகளை உலக்கு அறியச்செய்து, அதனால் தனக்கு உருப்படாத ஒரு வாசகர் கூட்டத்தை உலகெங்கிலும் நீங்கள் எழுப்பி, அப்படிப்பட்டவர்களின் காணிக்கைகளால் ஆண்டவரின் பரிசுத்தப் பெயரைக் களங்கப்படுத்துவதாகவே உங்கள் பத்திரிக்கை அமைந்திருக்கிறது. . . . . சகோதரருக்கு விரோதமாக எப்போதும் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிற சாத்தானின் (டையபோலஸ்) ஏஜென்ட் போல நீங்கள் செயல்படுவதை எண்ணி துயரமடைகிறேன்.

  அன்பான அக்கா (தங்களின் மனைவி) மற்றும் பிள்ளைகளின் நிலைமையை நினைத்து மனம் வெதும்புகிறேன். நீங்கள் உங்கள் பத்திரிக்கைமூலம் அவப்பெயரை உண்டாக்குவதுடன் அவர்களும் வெளியில் தலைக்காட்ட முடியாத அவல நிலையை உருவாக்குகிறீர்கள்.

. . . . . . . . . நீங்கள் இதுவரை விதைத்திருக்கிற விதைகள், உங்கள் பத்திரிக்கை செய்திகள், வார்த்தைகள், குற்றச்சாட்டுகள், அந்நியபாஷைக்குறித்த உங்களது அறிவற்ற விவாதங்கள் யாவும் முளைத்து பலன் கொடுத்தது உண்மைத்தான். உங்கள் பத்திரிக்கையைப்படித்து கெட்டுப்போனவர்களை குறித்து எனக்குத் தெரியும்.

  2011 ஜுன் மாத இதழில் 1 முதல் 7 பக்கங்களில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபர்களின் கடந்துவந்த பாதைகள் . . . . AOG ஸ்தாபனத்தை உருவாக்க அவர்கள் பட்டபாடுகள், செய்த தியாகங்கள், அபாரம். ஆனால் காலச் சுழற்சியில் அவர்கள் மாறிவிட்டார்கள்.

அது உண்மையாக இருந்தால் அதை சரிப்படுத்த நீங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாமே! அல்லது உதவி செய்திருக்கலாமே! குறிப்பிட்ட அந்த நபர்களை நேரில் அல்லது தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்திருக்கலாம் அல்லது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இதுதான் ஒரு நல்லவனின் செயல்.

குறிப்பு: AOG சபையினர் தங்கள் சபை பிரச்சனைகளைக்குறித்து இனி எனக்கு எழுதவேண்டாம். பிரச்சனைகளை நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக குறிப்பாக AOG சபையிலுள்ள என் வாசகர்களுக்காக நான் என் பங்கை நிறைவேற்றி விட்டேன், விவரங்கள் அறிந்துக்கொண்டீர்கள். கேள்வி கேட்கும் தைரியம் பலருக்கு வந்துவிட்டது. நான் எழுதிய விவரங்களுக்கு பாஸ்டர்.ராஜாமணி அல்லது பாஸ்டர்.மோகன் அவர்களோ மறுப்போ அல்லது தன்னிலை விளக்கமோ எனக்கு எழுதி அனுப்பினால் அதை மட்டும் ஜாமக்காரனில் வெளியிடுவேன்.


நம்பாதீர்கள் - பொய்

  பரிசுத்த ஆவியானவரின் நிறைவும் அந்நியபாஷை அடையாளம் என்று கூறும் எந்த சபையையும் நம்பாதீர்கள். அந்நியபாஷை சபையின் அடிப்படை உபதேசங்களில் ஒன்று என்று கூறும் எந்த ஒரு பெந்தேகோஸ்தே சபையும் உண்மையானதல்ல. இந்த அந்நியபாஷையில் உண்மையில்லாதவர்கள் தங்கள் அந்தரங்க விஷயத்திலும் நிச்சயமாகவே அவர்கள் உண்மையில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் அந்நியபாஷை பொய்யானது என்பதை சந்தேகமில்லாமல் நம்பலாம். இந்த விஷயத்தில் இவர்கள் யாரும் உண்மையில்லாததால் மற்றொல்லா விஷயத்திலும் உண்மையை இவர்களின் எதிர்ப்பார்க்கமுடியாது.

பரிசுத்த ஆவியின் நிறைவை ஆவியானவரிடம் கேட்கும்படி எந்த பாஸ்டர் போதிக்கிறாரோ! அவருக்கு வேதம் தெரியவில்லை என்று அர்த்தமாகும். பரிசுத்த ஆவியானவரின் நிறைவை இயேசு கிறிஸ்துவிடம்தான் கேட்கவேண்டும். இப்படித்தான் வேதம் போதிக்கிறது! பிழையாக போதிக்கும் பாஸ்டர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்!


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM