பாஸ்டர்.பால்தங்கையாவின் காரியம் . . . . . . நீங்கள் முன்மாதிரியான நபராக இருந்தால் அவரது பிரச்சனையைத் தீர்த்துவைக்க முன்வந்திருக்கலாம்.
. . . . . . . இவை எழுதுகிற நான் இயேசுவின் இரட்சிப்பை அனுபவிப்பதுடன்
இந்தியாவிலும், உலகின் சில நாடுகளிலும் . . . . கிறிஸ்துவின்மூலம் வரும் இரட்சிப்பையும், அவரால் மனித இனத்திற்கு வரும் மகத்துவமான நன்மைகளையும் பறைச்சாற்றி வருகிறேன்.
. . . . .
AOGயில் சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக
AOG சபையின் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும் பழிவாங்குவதுபோல் நீங்கள் நடந்துக்கொள்வது நல்லதல்ல.
தமிழ்நாட்டில்
AOG சபைகள் என்றால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறை பணியாளர்கள், வேத கலாச்சாலைகள், இரண்டு லட்சத்திற்கும் குறையாத விசுவாசிகள் அடங்கிய ஒரு பெரிய அமைப்பாகும்.
. . . . . . நீங்கள் வெளியிட்ட உங்கள் செய்தியால் அந்த
AOG சபை
ஸ்தாபனத்தைக் உங்கள் எழுத்தால் காப்பாற்றமுடியுமா? உங்கள்
விளம்பரத்தினால் அவைகளை சீர்திருத்தமுடியுமா?
எவர் துணிந்து அநீதியான காரியங்களை செய்கிறார்களோ? அவர்கள் அதற்கேற்ற தண்டனையை அடைவார்கள்!
இது அவர்களது மனசாட்சிக்கே தெரியும்! அவர்கள் திருந்துவதற்கு
ஆண்டவரே அவகாசம் கொடுத்து காத்திருக்கும்போது நீங்கள்
அவசரப்பட்டு அவர்களை விளம்பரப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது முறைதானா? . . . . . . . . . நல்லவேளை நீங்கள் டாக்டர் தொழிலை விட்டுவிட்டீர்கள்!
சந்தோஷம்! இல்லாவிட்டால் உங்களிடத்தில் வருகிறவனின்
குடலை உருவி மாலைப்போட்டிருப்பீர்கள்.
ஒவ்வொரு சபையிலுமே சில
யூதாசுகளும், அசித்தோப்போல்களும் . . . தேமாக்களும் (2 தீமோ 4:10)இருக்கத்தான் செய்கிறார்கள்.
AOGயின் உண்மையான நல்ல விசுவாசிகள், நல்ல ஊழியர்கள் இதுபோன்ற செய்திகளை உங்களுக்கு அனுப்பியிருக்கமாட்டார்கள்!.
நீங்கள் ஜாமக்காரனில் வெளியிட்ட
AOG சபை காரியங்களைக்குறித்து நானும் தீர விசாரித்து வருகிறேன். அவைகளை சீரமைப்பதில் பெரிய சிக்கல் எதுவுமில்லை. என்ன! அவர்கள்
சற்று பிந்தி விட்டார்கள் அல்லது அசதியாக இருந்துவிட்டார்கள்! அவை சரிப்படுத்தக் கூடியவைத்தான்.
AOG செய்திகளை கேள்விப்பட்ட நீங்கள் ஏன் உங்கள் ஊரில் உள்ள
AOG சபை கிறிஸ்தவர்களை அழைத்து, உபவாசித்து ஜெபிக்கவில்லை? நீங்கள் தானியேலைப்போல உபவாசித்து பாவ அறிக்கை செய்து ஜெபித்திருக்கலாமே! நெகேமியாப்போல என்றைக்காவது நீங்கள் இதற்காக அறைகூவல் விடுத்தீர்களா? நான் இதை கையெழுத்திடாத கடிதமாகவே எழுதுகிறேன். |