 CSI சினாட் பொது செயலர் திரு.பிலிப் அவர்கள் தாக்கப்பட்டார்.
CSI உருவாகியது 1947ம் ஆண்டு ஆகும். மொத்தம் 22 திருமண்டலங்கள் இணைந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு,(இலங்கை) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து
CSI சபைகள் அடங்கிய டையோசிஸ்ஸின் தலைமை ஸ்தாபனம் CSI சினாட் என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 66 ஆண்டு கால வரலாற்றில் நடந்திராத அவமானகரமான சம்பவம் கடந்த 2013 பிப்ரவரி மாதம்
CSI சினாட் கமிட்டியில் நடந்தது.
தமிழ்நாடு தூத்துக்குடி - நாசரேத் டையோசிஸ்ஸின் பிஷப்.Rt.Rev.Dr.ஜெபசந்திரன் அவர்கள் மேல் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியது. ஆனால் சினாட் வழக்கம் போல் நடவடிக்கையை எடுக்காமல் குற்றசாட்டுகளை ஊறப்போட்டது. அதன்பிறகு அவர் மேல் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாகவே
CSI சினாட் செயற்குழு பிஷப்மீது நடவடிக்கை எடுத்தது.
 |
CSI சினாட் செயற்குழு கூட்டத்தில் தர்ணா செய்த
பிஷப்.ஜெபசந்திரன் தரையில் அமர்ந்துள்ளார். |
பிஷப்.ஜெபசந்திரன் அவர்களை பிஷப் பொறுப்பிலிருந்து நீக்கி அவரை சஸ்பெண்ட் செய்கிறது என்ற சினாட் நிர்வாக கமிட்டி எடுத்த
தீர்மானத்தை மாடரேட்டர்.தேவகடாட்சம் அவர்கள் முன்னிலையிலும மற்றும் சினாட் கூட்டத்தில் கலந்துக்கொண்ட நான்கு பாஷைகள் பேசும் நான்கு மாநில பிஷப்மார்கள், மெம்பர்கள் கூடிய அக்கூட்டத்தில்
CSI சினாட் செயலர் திரு.பிலிப் அவர்கள் சஸ்பெண்ட் அறிக்கையை வாசித்தார். உடனே தூத்துக்குடி பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் பிலிப் அவர்களின் சட்டையைப்பிடித்து இழுத்து அவரை தாக்கி, அறிக்கையை படிக்கவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல்
MLA, MP அரசியல்வாதிகள் கூட்டத்தில் வழக்கமாக நடப்பதைப்போல் மைக்கை பிடித்து எடுத்து எறிந்தார். இந்த சண்டையில் தூத்துக்குடி பிஷப்புக்கு உதவியாக சினாட் செயற்குழு உறுப்பினர் கோயமுத்தூர் டையோசிஸ்ஸை சேர்ந்த
திரு.அமிர்தம் அவர்களும் பிஷப் அவர்களுக்கு உதவியாக பிஷப்புடன் சேர்ந்து திரு.பிலிப்பை தாக்கி அவை நாகரீகம் இல்லாமல் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து ஏசினார். இவைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி பிஷப்புடன் சேர்ந்து பிலிப் அவர்களை தாக்கி கெட்ட வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்ட சகோ.அமிர்தம் அவர்கள் உடனே அங்கேயே தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் சினாட் அவருக்கு உடனே மன்னிப்பு கொடுத்தாக அறிவித்தது. ஆனால் பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. எழுத்து மூலமாகவும் மன்னிப்பு கேட்க ஆலோசனை அளிக்கப்பட்டது. அதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை. ஆகவே அவர் பிஷப் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக சினாட்டில் அறிவிக்கப்பட்டது. பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் சண்டைப்போட்டு
கெட்ட வார்த்தைகளை உபயோகித்தது (சினாடில்) இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மற்ற மாநில பிஷப்மார்கள் முன்னிலையில் நடந்ததால் தமிழ்நாட்டு
CSI சபைகளுக்கு பெரும் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டது. |