சாது கண்ட சொப்பனம்

உத்திர பிரதேச தலைநகரிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கை நதி கரையில் ஒரு குக் கிராமமான தௌண்டியா கோடா என்ற இடத்தில் 1857ம் வருடம் குறு நில மன்னராக ஒரு ராஜா இருந்தார். அவர் பெயர் ராம் பக்ஷ் சிங்கால். இவர் சிவன் கோவில் கட்டி வழிப்பட்டார். இப்போது கங்கை நதிக்கரையில் ஒரு திடீர் சாமியார் ஷோபன் சர்கார் என்பவர் உருவானார். 65 வயதுள்ள இவர் திடீரென்று தான் ஒரு சொப்பனம் கண்டதாகவும், மரித்த ராஜாவான ராம் பக்ஷ் சிங்கால் என்பவர் சாவதற்கு முன் தொண்டியா கோடா கிராமத்தில் தான் கட்டிய சிவன் கோவிலின் அடியில் ஏராளமான தங்க கட்டிகளையும், தங்க நகைகளையும் புதைத்து வைத்துள்ளார் என்பதை இந்த திடீர் சாமியாரின் கனவில் வந்து கூறியதாக செய்தியை மெதுவாக கிராம ஜனங்களிடையே கசிய விட்டார். இந்த தங்க புதையல் செய்தி இந்திய மத்திய சுரங்க துறை அமைச்சர்.தின்ஷா பட்டேலுக்கு எட்டியது. உடனே மந்திரி 2013ல் செப்டம்பர் 29ம் தேதி லக்னோவில் உள்ள இந்திய மண்ணியல் ஆய்வுத்துறை (GSI) பிராந்திய தலைமை அலுவலகத்தின் தலைவர்.சத்யபிரகாஷ் பாரதியாவிடம் இது மிகவும் இரகசியம் என்று எழுதப்பட்ட கோப்பின் (file) மூலம் தங்கத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று அரசாங்க ஆணையிட்டுள்ளார்.

இந்த தங்க புதையல் விவரம் 1). விவாசயத்துறை இணையமைச்சர் சரன்தாஸ் மஹந்த், 2). இந்திய பிரதமர் மன்மோகன் சிங், 3). நிதியமைச்சர் ப.சிதம்பரம், 4). உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, 5). கலாச்சார அமைச்சர் சந்திரேஷ்குமார் கட்டோச் மற்றும் சுரங்க துறை அமைச்சகத்துக்கு தங்க புதையல் தோண்டப்போகும் விவரம் கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டது.

2013 அக்டோபர் 6ம் தேதி GSI டைரக்டர் ஜெனரல் ஏ.சுந்தரமூர்த்தி, மண்ணியல் ஆய்வாளர்கள் நடத்திய பூர்வாங்க பரிசோதனையில் தங்கம், வெள்ளி மற்றும் வேறுவகை உலோகமும், மண்ணுக்குள் இருக்கலாம் என்று அறிவித்தார்.

இது விஞ்ஞான பூர்வ அணுகுமுறைக்கு மாறாக GSI மற்றும் இந்திய அகழ்வாராய்ச்சி துறை (ASI) ஆகிய இரண்டு அமைப்புகளையும் இந்திய அரசு முட்டாள்தனமான தங்க வேட்டையில் ஈடுபடுத்தி கட்டளையிட்டருப்பது இந்திய விஞ்ஞானிகளை திகைக்க வைத்துள்ளது.

விவரம் அறிந்த அந்த ஊர்மக்களும் அந்த கோவிலின் பல பாகங்களில் இரவுவேளையில் திருட்டுதனமாக மண்ணை தோண்ட ஆரம்பித்தார்கள். வெளிஊர்களிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து மண்தோண்ட ஆரம்பித்துள்ளார்கள்.

பகலில் இந்திய அரசாங்கம் இராட்சத இயந்திரம் கொண்டு தங்கத்தை தேடிகொண்டிருப்பார்கள். மறுபக்கம் ஊர்மக்கள் மண்ணை தோண்டிகொண்டிருந்தார்கள். டிவி சேனல்காரர்கள் ஏராளமான சேடிட்லைட் கனக்ஷனோடு இரவும்-பகலும் கேமராவுடன் கவனித்துக்கொண்டிருந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத அந்த சின்ன கிராமத்தில் மக்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது. திடீர் கடைகள், ஓட்டல்கள் உருவாகின. பிரச்சனையும் உருவாக ஆரம்பித்தவுடன் போலீசும், ராணுவமும் வரவழைக்கப்பட்டது. தோண்டிய இடத்தில் மண் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் திடீர் சாமியார் 4000 டன் தங்கம் சொப்பனத்தில் நானே கண்டேன் என்றார்.

இதன்மூலம் யாராலும் கவனிக்கப்படாமல் இருந்த இந்த சாமியாரின் பெயர், டிவியிலும், தினசரி பேப்பரிலும் வெளிவர ஆரம்பித்தது. யாராலும் அறியப்படாத சாமியார் இப்போது திடீரென்று பிரபலமானார். தான்மட்டும் தனியாக வாழ்ந்த அந்த சிறிய குடிசை சில வாரங்களில் கட்டிடமாக எழும்பி அது ஆசிரமமாக மாறியதால், பெரிய பெரிய பணக்காரர்கள் சாமியரை தேடிவந்து அவரை வணங்கி ஆசி பெற்றுபோன வண்ணமாக இருந்தார்கள். முடிவில் அங்கு எந்த புதையலும் இல்லை என்று இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியது.


உலகம் சிரித்தது

உலகம் முழுவதும் இந்திய அரசாங்கத்தின் இந்த முட்டாள்தனமாக புதையல் தேடும் செயலை அறிந்து சிரித்தது. இந்த முட்டாள்தனமாக புதையல் தேடுதல்களில் படித்த விஞ்ஞானிகள், மெத்த படித்த நிதிமந்திரி சிதம்பரம், பிரதமர்.மன்மோகன்சிங் போன்ற பல மந்திரிகள் எப்படி இதற்கு கட்டளை கொடுத்தார்கள். இவர்களுக்கு ஆலோசனை கூற மெத்தப்படித்த ஆலோசகர்கள் உண்டே? அவர்களில் ஒருவராவது இந்த முட்டாள்தனத்தை தன் மந்திரிகளுக்கு எடுத்து சொல்லியிருக்ககூடாதா?

அகழ்வாரய்ச்சி நிபுணர்கள், விஞ்ஞானிகள் ஒருவராவது இந்த முட்டாள்தனமான தேடுதலுக்கு நாங்கள் இணங்கமாட்டோம் என்று கூறியிருக்கக்கூடாதா?. இந்திய அரசாங்கமே புதையல் தேட முக்கிய காரணமானது. இந்தியாவுக்கு பெருத்த அவமானமாகும். இப்போது இந்திய பொருளாதாரம் மிகவும் கீழே போய் கொண்டிருக்கிறது. தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து விலைக்கு வாங்கி கொடுக்க வேண்டியுள்ளது. அதனால் ஏராளமான அன்னிய செலவாணி அதிகமானது. வெளிநாட்டிலிருந்து தங்கம் வாங்க நமது பணம் செலவு செய்யப்படுவதால் பெரிய கஷ்டத்தில் நாடு திணறிக்கொண்டிருக்கி;றது.

நிதியமைச்சர்.சிதம்பரம் அவர்கள் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார கோவிலான திருப்பதியில் உள்ள தங்கத்தை இந்திய அரசாங்கத்தாருக்கு கொடுத்து உதவகேட்டார்கள். கொடுக்கமாட்டோம் என்று கோவில் நிர்வாகிகள் கூறிவிட்டனர். இந்தியா முழுவதும் உள்ள இந்து கோவில்களின் பொறுப்பாளர்களிடம் அரசாங்கம் தங்கம் கேட்டுவேண்டினார்கள். யாரும் கொடுக்கவில்லை.

இந்த சமயத்தில் திருவனந்தபுரம் பத்மநாப கோவிலில் மூன்று சுரங்கத்தில் எடுக்கப்பட்ட தங்க நகைகள் எண்ணமுடியாத அளவு கணக்கிடமுடியாத அளவு மலைபோல் தங்கம் குவிந்து கிடப்பதை நாம் செய்திதாள்கள் மூலம் அறிவோம். சாமியார் கண்ட சொப்பனம் உண்மையானால் திருவனந்தபுரத்தில் கிடைத்ததைப்போல் பெருத்த தங்க வேட்டை கிடைத்தால் இந்திய பொருளாதாரத்தை எலக்ஷனுக்கு முன் தூக்கி நிறுத்தலாமே என்ற ஆசையில் இந்திய அரசாங்கம் அரசு எந்திரத்தையே முடுக்கிவிட்டு மண்தோண்டி பார்த்தார்கள். சாமியாரின் பொய் கனவு விவரம் அறிந்தவுடன் இந்திய அரசாங்கம் சோர்ந்துபோனது மட்டுமல்ல. உலக நாடுகள்முன் தாங்கள் தங்கம் தேடும் முட்டாள்கள் என்று தங்கள் செயலினால் அறிவித்துள்ளார்கள். இது இந்திய தேசத்துக்கு எவ்வளவு பெரிய தலைக்குனிவு!.


பொய் சாதுக்களின் - பொய் தரிசனம்:

தங்க புதையலை நம்பிய இந்திய மந்திரிகளைப்போல் அரசாங்கத்தில் படித்த அதிகாரிகள் ஆகியவர்களைப்போலவே கிறிஸ்தவ உலகில் இப்படிப்பட்ட பொய் சாதுக்களின் தரிசனங்களை நம்பி, படித்த பிஷப்மார்கள், ஆயர்கள், படித்த ஊழியர்கள், அந்நியபாஷை பேசும் ஊழியர்கள் ஜெபத்தில் பெயர் அழைக்கும் பொய் தீர்க்கதரிசிகள் எல்லாம் இந்த சாதுக்களின் பின்னால்..... காணப்படுகிறார்கள்.

பிசாசு இந்திய மந்திரிகளையும், உயர்மட்ட ஆராய்ச்சியாளர்களையும், விஞ்ஞானிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் முட்டாளாக்கிக்கொண்டிருப்பதைப்போல்...

நம் கிறிஸ்தவ கள்ள தீர்க்கதரிசிகள் ஊழியர்கள் மற்ற கிறிஸ்தவ ஊழியர்களையும், விசுவாசிகளையும் படு முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்புவதற்கும், ஒரு பெரும் கூட்டம் உள்ளது என்பது மனதில் வேதனையளிக்கிறது. ஜெபிப்போம்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM