கூட்டங்கள்

NAGERCOIL (IELC) LUTHERIN CHURCH CONVENTION

கன்னியாகுமரி நாகர்கோவில் லூத்தரன் சபையின் கூட்டங்கள் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது. தலைமை போதகர் Rev.Suvusesamuthu, உதவி போதகர் Rev.Jeyadhas ஆகியவர்கள் ஒவ்வொரு கூட்டத்தையும் ஜெபத்துடன் நடத்தினர். கூட்ட ஏற்பாடுகளை சபை தலைவர் Mr.S.G.Packiadhas, செயலர் Mr.D.Alexander மற்றும் எல்லா பொறுப்பாளர்கள் ஆகியவர்கள் சேர்ந்து சிறப்பான கூட்ட ஏற்பாடுகளை செய்து சபைநாளை கர்த்தருக்கு நன்றி கூறும் கூட்டமாக நடத்தினார்கள். சபையைப்பற்றி வேதம் கூறும் ஆலோசனை என்ன என்பதைக்குறித்து இரண்டு நாட்கள் தொடர்ந்து நான் பேசினேன். மக்கள் செய்தியை சிரத்தையுடன் கவனித்தார்கள். விசேஷ இசைக்குழு ஏற்பாடு செய்திருந்தனர். மற்ற CSI, இரட்சன்யசேனை சபையிலிருந்தெல்லாம் மக்கள் இக்கூட்டங்களில் பங்குகொண்டனர். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.


MADURAI - RAMNAD CSI DIOCESE
KODAIKANAL FMPB ஸ்கேன் கூட்டங்கள்

நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் ஸ்கேன் கூட்டங்கள் கொடைக்கானல் CSI கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நடந்தது. சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் CSI சபை கூட்டத்தில் பேசினேன். மக்கள் மிக ஆவலாக நேரம்பாராமல் செய்திகளை கேட்டனர். அந்த கூட்டங்களில் சிலர் மிஷனரிகளாகவும், மிஷனரிகளை தாங்குகிறவர்களாகவும் தங்களை ஒப்புக்கொடுத்தனர். இந்த CSI ஆயலம் நல்ல வளர்ச்சியுற்ற சபையாகவும், 3 பெரிய கிளை சபைகளை பாஸ்ட்ரேட் சபைகளாகவும் உருவாக்கியுள்ளனர். சபை தலைமை ஆயர்.Rev.M.Sadhish, MA, BD., அவர்கள் கூட்ட ஏற்பாடுகளை ஜெபத்துடன் ஆயத்தம் செய்திருந்தார். கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது.

FMPB Scan செயலர் Rev.Koilraj, MTh, BD., அவர்கள் பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் பணிதள விவரங்களையும், ஆலயம் கட்டவேண்டிய தேவைகளையும் அவருக்கே உரிய பாணியில் பகிர்ந்துகொண்டார். எல்லாரும் பாரத தேசத்தின் மிஷனரி ஊழியத்தின் அவசியத்தை உணர்ந்தார்கள்.


SOUTH KERALA CSI DIOCESE - KOLLAM TAMIL CSI CHURCH CONVENTION

தலைமை போதகர் Rev.Isaac Paulsingh அவர்கள் சபை கமிட்டியுடன் சேர்ந்து கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள். சபை நாள் சிறப்பு கூட்டத்தை South Kerala Diocese Bishop Rt.Rev.Dharmaraj Rasalam அவர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மார்தோமா சபை, மற்ற CSI சபை ஆயர்கள் பலரும் வந்து சிறப்பித்தனர். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.


MUMBAI - ANDHERI NEW JERUSALEM CNI CHURCH CONVENTION

மேலே காணும் சபையில் நடத்தப்பட்ட சபை நாள் ஆவிக்குரிய கூட்டங்கள் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது. மெத்தடிஸ்ட், CNI சபைகளின் ஆயர்கள் கூட்டங்களில் கலந்துக்கொண்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இதில் பெரும்பாலான ஆயர்மார்கள் பல வருடங்களான என்னை மிகவும் நேசிப்பவர்கள். கர்த்தர் தாமே அந்தேரி CNI சபைமக்களையும் ஆயர் மற்றும் பொறுப்பாளர்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. இங்கும் கர்த்தரின் நாமம் மகிமைப்பட்டது. அனைத்து ஆயர்களுடன், நானும் புகைப்படத்தில் நிற்க்கிறேன்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN