வாசகர் கடிதம்

வாசகர் கடிதம் 1:

2012 பிப்ரவரிமாத ஜாமக்காரன் 41ம் பக்கம் அவசர அறிப்பு கிறிஸ்தவ உலகில் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாகும். ஒரு அரவாணியை (அலி) ஆயர் ஆக்குகிறார்கள் என்பது கற்பனை பண்ணிக்கூட பார்க்கமுடியாத செய்தி. எப்படி இவர்களுக்கு மனது வந்தது? ஐயா, உங்கள் பணி மிகவும் அற்புதமானது. இன்றைய தேவைகேற்ற பணியாகும். அது எத்தனை ஆபத்தை உங்களுக்கு உண்டாக்கும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் விசேஷ உபவாச ஜெபம் தொடங்கிவிட்டோம்.

..........தூத்துக்குடி.


வாசகர் கடிதம் 2:

  கோபுரத்தைக் கட்டி நமக்கு பேர் உண்டாகப்பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆதி 11:4.

  மனுபுத்திரர் கட்டுகிற கோபுரத்தை பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். ஆதி 11:5. அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார். ஆதி 11:6,9.

  அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற் போகிறார்கள். சங் 55:19, பிர 8:122.

  மனந்திரும்பு சுகம் தருவேன் என்று இயேசு கிறிஸ்து ஒருநாளும் கூறியதில்லை. சுகம் பெற்றுக்கொள் இனி பாவம் செய்யாதே என்பதுதான் கிறிஸ்துவுன் உபதேசம். யோவ 5.

  இந்தியாவை இயேசுவுக்கு கொடுக்க முயன்றோம். இந்தியாவுக்கு இயேசுவை கொடுக்கும் வழியை யோசிப்போம்.

........................... சென்னை


வாசகர் கடிதம் 3:

அன்பு நிறை ஜாமக்காரன் ஆசிரியருக்கு, இறைவேந்தன் இயேசுவின் திருப்பெயரில் நல்வாழ்த்துக்கள். பரபரப்பும், சர்ச்சைக்குரியதுமான ஜாமக்காரன் ஏப்ரல் 2012 இதழ் கண்டு தெளிவுற்றேன். தற்போது புதிய அலைகளை எழுப்பிக்கொண்டிருக்கும் அரவாணி-ஆயர் பிரச்சனைக் குறித்து, அடிப்படையில் தாங்கள் ஒரு மருத்துவராக இருப்பதால் உடற்கூற்றுபற்றியும், தற்போது இறைப்பணியில் ஈடுப்பட்டிருப்பதால், விவிலிய ஆதாரங்களுடன் கூடிய விளக்கங்கள் வழியேயும், இதழ் முழுவதும் தெளிவான, முழுமையான கருத்துக்களை நிரப்பியிருக்கிறீர்கள். பொதுவாக, குழப்பங்களும், அறியாமைகளும் மனிதர்களை எளிதில் முடமாக்கிவிடுகின்றன. தாங்கள் செய்திகளை வழங்கியிருக்கும் விதமும், நேர்த்தியும், தெளிவுரையும் வேறெந்த கிறிஸ்தவ இதழும் இப்பொருள் சார்ந்த பிரச்சனையில் துணிந்து செயல்படவில்லை என்பதை உறுதி செய்கின்றன. அரவாணி-அலி என்கிற திருநங்கைகள் என்பவர் யார்?, அண்ணகன் என்பதற்கு என்ன விளக்கம்?, அரவாணிகளுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை போன்றவற்றிக்கு உரிய ஆதாரங்களுடன் தாங்கள் விவரித்திருப்பது, தங்களுடைய பத்திரிக்கை ஊழியத்திற்கு ஒரு மணிமகுடமாக விளங்குகிறது.

அரவாணி ஒருவர் ஆயராகப்போவது சர்ச்கைக்குரியதுதான். இதுபற்றிய மாறுப்பட்ட கருத்துக்கள் திருச்சபையிலும், திருச்சபை மேலிடத்திலும் எழுவதில் ஆச்சரியமில்லை. ஜாமக்காரன் இதழைப் புரட்டிய பின்னர் ஒருவருடைய நிலைப்பாடு எப்படி என்பதுதான் கேள்விக்குறி. தங்களிடம் இன்னொரு கோரிக்கையும் வைக்கிறேன். LGBT என்று சொல்லக்கூடியவர்களது மாறுப்பட்ட கலாச்சாரம் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதுபற்றிய தங்கள் நிலை என்ன என்பதை எதிர்வரும் இதழ்கள் தெளிவுப்படுத்தும் என்று நம்புகிறேன்.

மேலும் வாசகர் கருத்துகளை வெளியிடும்போது... ஒரு வாசகர் என்று குறிப்பிடாமல், அவரது பெயர், முகவரியுடன் வெளியிட்டால் அது சிறப்பு.

- சந்திரா மனோகரன், அருளமுது. ஈரோடு.


வாசகர் கடிதம் 4:

மனநல மருத்துவர் & ஆலோசகர் அவர்கள் அண்ணகர்களைப்பற்றி

அண்ணகர் அல்லது அரவாணிகள் விவகாரம்:

இதை எழுதும் நான் தஞ்சாவூர் CSI சபை அங்கத்தினனாகும்.

டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் அரவாணிகள்-அண்ணகர்களைப்பற்றி ஜாமக்காரனில் எழுதியது வேதாகமத்தின் அடிப்படையில் சரியே என்று நாங்கள் யாவரும் உணருகிறோம். இது குறிப்பிட்ட அரவாணி-அண்ணகர் என்று அழைக்கப்படும் நபரையோ, குழுவினரையோ தாக்கி எழுதப்பட்டதல்ல.

ஒரு அரவாணி என்பவரை ஒரு தேசமோ அல்லது நமது இந்தியாவோ தங்களது நாட்டின் பிரதம மந்திரியாகவோ அல்லது முதலமைச்சராகவோ ஏற்றுக்கொள்ளுமா?

அப்படியே ஒரு அரவாணியை சர்வதேச மக்களுக்கு முன்பாக இவர்தான் எங்கள் பிரதம மந்திரி அல்லது இவர்தான் எங்கள் முதலமைச்சர் என்று அறிமுகப்படுத்தினால் உலக நாடுகளுக்கு முன்பாக அதுவே ஒரு கேலி கூத்தாகிவிடும் அல்லவா? (அலி) அரவாணிகளுக்கு வாழ்வு கொடுக்கவேண்டும் என்று விரும்பும் ஒரு சபை தலைவரோ - ஆயரோ - அரவாணியான ஒருவரை தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையாக திருமண ஏற்பாடு செய்து தங்கள் தியாகத்தை, இரக்கத்தை காண்பிக்க முன்வருவார்களா? நிச்சயம் முன்வரமாட்டார்கள்!. ஆக, இப்படிப்பட்ட அரவாணி (அலி) நபரை தேவ சபை ஊழியத்தில் ஆயராக (மேய்ப்பராக) பிரதிஷ்டை செய்ய இவர்கள் எப்படி தைரியப்பட்டார்கள்? ஆயர்(மேய்ப்பன்) ஊழியம் அவ்வளவு மலிவாகிவிட்டதா?

டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் ஜாமக்காரனில் எழுதியதோ அல்லது அதை வாசித்த வாசகர்களாகிய நாங்களோ (அலி) அரவாணிகளை எந்த விதத்திலும் தரக்குறைவாக்கவில்லை. அரவாணிகளை (அலி) சமுதாயத்தில் உயர்த்தும் எல்லாவித முயற்சிகளையும் நாங்கள் மிகவும் வரவேற்கிறோம். மேலும் நாங்களும் அதை ஊக்கப்படுத்துகிறோம்.

டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் (அரவாணிகளை) அண்ணகர்களைப்பற்றி ஜாமக்காரனில் எழுதியது வேதாகமத்திலுள்ள வசனத்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப்பார்த்து எழுதப்பட்டதாகும். டாக்டர்.புஷ்பராஜ் அவர்களின் இப்பெரும் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துகிறோம்.

சபை தலைவர்கள் - ஆயர்கள் இவ்விஷயத்தை சரியான முறையில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

கிறிஸ்துவுக்குள்
Dr.Prabhakar .J.Prakash

Copy to : CSI Modarator, CSI Synod, Chennai.
(மொழிபெயர்க்கப்பட்டது)


வாசகர் கடிதம் 5:

அரவாணிகளைப்பற்றிய ஏப்ரல் 2012 ஜாமக்காரனில் நீங்கள் எழுதிய செய்தி மிக அருமை. உளவியல், உயிரியல், சமூகவியல் ஆகியவைகளை கலந்து அழகு குறையாமல் தந்துள்ளீர்கள். இது உங்களால் மட்டுமே முடியும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

- சகோ.சகரியா, ரத்தினபுரி, கோவை.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM