பிரதரன் சபை உபதேச விளக்கம்

குறிப்பு: 2012 பிப்ரவரி மாத ஜாமக்காரனில் பக்கம் 13ல் ஸ்தானாபதி என்ற பத்திரிக்கையில் வந்த செய்தியைக்குறித்து வாசகர்கள் கேட்ட கேள்விக்கு ஜாமக்காரனில் நான் அளித்த பதில்: பிரதரன் சபை விசுவாசிகள் பலரின் விமர்சனத்துக்குள்ளானது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்தானாபதி பத்திரிக்கையில் அந்த செய்தியை எழுதிய சகோ.Y.ஜோண்ஸ் அவர்களே விளக்கம் எழுதியுள்ளார். அவரைப்போல வேறு நான்கு பிரதரன் சபை விசுவாசிகளும் கடிதங்கள் எழுதியுள்ளார்கள். சகோ.Y.ஜோண்ஸ் அவர்களின் கடிதத்தின் முக்கிய பகுதிகளை வாசகர்களாகிய நீங்களும் வாசிக்கலாம்.

அன்பிற்குரிய சகோதரன்.புஷ்பராஜ் அவர்களுக்கு,

உங்கள் நண்பனும், சகோதரனுமாகிய Y.ஜோண்ஸ் (மார்த்தாண்டம்) எழுதிக்கொள்வது என்னவெனில்:

உங்களது 2012-பிப்ரவரி பத்திரிக்கையை வாசித்து மிகவும் வருந்தினேன். ஸ்தானாபதி பத்திரிக்கையில் வந்த செய்தியும், பிரதரன் சபை உபதேசத்தின் தவறும் என்று தலைப்பில் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள். ஸ்தானாபதியின் 2011 டிசம்பர் பத்திரிக்கையில் இந்த விஷயத்தைக்குறிப்பிட்டு எழுதியது நான்தான் (சகோ.ஜோண்ஸ்) 1 கொரி 14:34ல் நான் கூறியிருப்பது தவறு என்று நீங்கள் கண்டால், அந்த தவறை மட்டும் எடுத்துக்கூறி, அந்த வசனத்துக்கு சரியான விளக்கம் கூறியிருந்தால் நீங்கள் பாராட்டுக்குரியவர்களாவீர்கள். ஆனால் அப்படி செய்யாதபடிக்கு, நான் கூறாதவைகளையும் எடுத்துக்கூறி விமர்சனம் செய்தது சரியா? என்று மறுமுறை சிந்தித்துப் பார்க்கும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

  சபை கூடி வராத மற்ற சமயங்களில் பெண்கள் பேசக்கூடாது என்று நான் எழுதவில்லையே!. மேலும் பெண்கள் ஊழியம் செய்யக்கூடாது என்றும் நான் எழுதவில்லையே! நான் அப்படி கூறவில்லை என்றும் நீங்களே ஜாமக்காரனில் குறிப்பிட்டிருக்கீறீர்களே! எந்த சபையைப்பற்றியும், பத்திரிக்கையைப் பற்றியும் விமர்சிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் விமர்சிப்பது சரியாக இருக்கவேண்டும்.

பவுல் இங்கு எபிரேய ஜெபாலயங்களைப்பற்றி கூறவில்லை. சபையைப் பற்றியே கூறுகின்றார். நீங்கள் கூறியிருப்பதுபோல் (கடைசியிலிருந்து இரண்டாவது வரி) கணவனிடம் மனைவி பேசுவதைக் குறித்ததாயின் அது Chatt என்று, அதாவது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் உரையாடல் என்று கூறலாமல்லவா! இங்கு அது பொருள்ளல்லவே! 14ம் அதிகாரத்தை மொத்தமாக பாருங்கள். இது சபை ஆராதனையில் ஏற்பட்ட தாறுமாறுகளை, சபைக்குரிய காரியங்களை சரி செய்யும்படியாய் எழுதும் ஒரு பகுதி அல்லவா இது? கணவன்-மனைவியோ அல்லது இரு நண்பர்களோ பேசிக்கொண்டிருப்பது, 1 கொரி 14ம் அதிகாரத்தின் செய்தி அல்லவே! (சினகாக்-யூதரின் ஆலயம்) Synagogue-க்கில் ஆண்களையும், பெண்களையும் எப்படி உட்கார வைத்திருந்தார்கள்? கொரிந்து சபையிலும் அப்படித்தான் உட்கார வைத்திருந்தார்களா? அப்படி தனித்தனி இடங்கள் கொடுத்திருந்தால் பெண்களுக்கு தனி மறைவிடம் கொடுத்திருந்தால் எப்படி மனைவிமார்கள் உரையாடுவார்கள் - Chatt செய்திருப்பார்கள்? சிந்திப்பீர்.

  ரோமர் 16ம் அதிகாரத்தில் பவுல் பெண்களையும் அவர்கள் ஊழியங்களையும் புகழ்ந்து எழுதியிருப்பதை, நானோ அல்லது பிரதரன் சபையோ மறுக்கவில்லையே! லீதியாள், பிரிஸ்கில்லாள் ஆகியவர்களுடைய ஊழியங்களையும் நான் மறுக்கவில்லை. பிறகு ஏன் அவைகளை நீங்கள் குறிப்பிட்டீர்கள்?

பெண்களுக்கு ஏராளம் ஊழியங்கள் சபையில் உண்டு என்பதை நானோ! அல்லது பிரதரன் சபையாரோ மறுக்கவில்லை. பெண்கள் ஜெபக்கூட்டங்கள் நடத்தவில்லையென்றும் ,நடத்தக்கூடாதென்றும் நான் கூறவில்லை. லூக் 8:3ல் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் சரிதானா?, என்று ஒருமுறைகூட அந்த வசனத்தை படித்துப்பார்க்கும்படி தயவாய் கேட்டுக்கொள்கிறேன். அந்த வசனம் இயேசுகிறிஸ்து பெண் ஊழியர்களை உருவாக்கினார் என்று அங்கு கூறப்படவில்லையே! அப்படியே உருவாக்கியிருந்தாலும், அது 1கொரி 14:3ல் கூறப்பட்டதற்கு சம்மந்தம் இல்லாத ஒன்றல்லவா? அந்த பெண்கள் தங்கள் ஆஸ்திகளால் ஆண்டவருக்கு ஊழியம் செய்தார்கள் என்றுதானே கூறப்பட்டுள்ளது. உயிர்த்தெழுதலை அறிவிக்க ஆண்டவர் பெண்களை பயன்படுத்தியதைக்குறித்து நீங்கள் எழுதியதை நான் மறுக்கவில்லை.

இங்கு சபையாகக்கூடி ஆராதிக்கும்போது என்பதுதான் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும். பிரதரன் சபையில் ஆண் ஆதிக்கம் அதிகம் என்று கூறியுள்ளீர்கள். நல்லவேளையாக "அவன் உன்னை ஆண்டுக் கொள்வான்" என்று ஆதி 3:16ல் ஆண்டவர் சொன்னதை நீங்கள் விமர்ச்சிக்கவில்லை. நம்முடைய வேதமும் அப்படிதான் சொல்கிறது.

1 கொரி 14ல் as also saith the Law என்பதையும் சிந்தியுங்கள். பின்னே என்னதான் நான் பிழையாக எழுதிவிட்டேன்? நீங்கள் 1 தீமோ 2:12க்கு கொடுத்திருக்கும் அதே விளக்கம்தான் நான் 1 கொரி 14:34க்கும் கொடுத்துள்ளேன். ஆகவே நாம் இருவரும் ஒரே காரியத்தைப்பற்றிதான் சொல்லியிருக்கிறோம். இங்கு எந்த முரண்பாட்டையும், அபிப்ராய வித்தியாசத்தையும் நான் காணவில்லை.

அதாவது நம்முடைய சபை ஆராதனைகளில் (ஆண்களும், பெண்களும் கூடியிருக்கும் சபையில்) பெண்கள் எழும்பி பிரசங்கம் செய்யவோ! பேசவோ! கேள்விகள் கேட்கவோ! செய்யவேண்டாம். Leadership அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அவர்கள் அமைதலாக இருக்கவேண்டும் இதுதான் நாங்கள் வலியுறுத்தி கூறும் உபதேசமாகும்.

நீங்கள் குறிப்பட்டிருப்பதுபோல் முன்-பின் வசனங்களையும் அந்த அதிகாரத்தின் முக்கிய செய்தி கூறியதின் பின்னணிகளையெல்லாம் படித்துதான் விளக்கங்கள் கொடுக்கவேண்டும்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பெண்களுக்கு ஏராளம் ஊழியங்கள் இருக்கிறது. இதை நாங்கள் மறுக்கவில்லை. எனவே பிரதரன் சபை போதனைகள் என்று ஒட்டுமொத்தமாக நீங்கள் கூறாமல், தவறை மட்டும் சுட்டிக்காட்டுங்கள். நாங்கள் திருத்திக்கொள்ளலாமே! எங்கள் சபைகளிலும் அநேக பெண் ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

சபையில் பெண்கள் பேசுவதற்கு உத்தரவு இல்லை. 1 கொரி 14:34ல் வேதமும் அப்படியே சொல்கிறது. அது அயோக்கியமாய் இருக்கும். 35வது வசனம் இவைகளையும் மறுபடியும் பாருங்கள். இப்போதைக்கு இந்த விளக்கம் போதும் என்று எண்ணுகிறேன்.

Y.Jones,.
Marthandam.K.K.DT


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM