உலகம் கவனித்த ஒபாமாவின் அரசியல் பிரசங்கம்

அமெரிக்க அதிபர்.ஒபாமா அமெரிக்காவில் உள்ள குடழசனைய மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் பல்கலைகழகத்தில் 10.4.2012 அன்று நிகழ்த்திய சொற்பொழிவு அமெரிக்காவில் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு ஒபாமா அரசு மூலம் எடுத்த சில நடவடிக்கை காரணமாகவும், அமெரிக்காவில் உள்ள மொத்த தனியார் துறையும் எடுத்த சில கடுமையான முடிவுகளால் அமெரிக்கா பொருளாதாரம் ஓரளவு சீரடைந்து தலை நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது. என்றாலும் பழைய ஸ்திரதன்மை இழந்து நிற்கிறது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு 2012 டிசம்பர் மாதம் நடக்கயிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒபாமாவின் இந்த சொற்பொழிவு எல்லா நாடுகளையும் குறிப்பாக அமெரிக்க அதிபரை தெரிந்தெடுக்கும் அமெரிக்க மக்களையே சிந்திக்க வைத்துள்ளது. ஒபாமா அதிபரானதும் பொருளாதரத்தை உயர்த்த எடுத்த நடவடிக்கையில் குறிப்பிடதக்கது. அமெரிக்கவரில் உள்ள பெரும் பணக்காரர்கள் செலுத்தும் வருமான வரியை மற்ற நடுத்தர மக்களைவிட மிக அதிகமாக்கியது. அமெரிக்கா பணக்காரர்கள் இப்போது ஒபாமாவை வெறுக்க ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது. அவர்கள்தான் எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் செலவுக்கு மிகப்பெரும் பணத்தொகையை கொடுப்பவர்களாகும். அவர்களின் வெறுப்புக்கு ஆளாகியதின் தாக்கம் ஒபாமாவின் இந்த சொற்பொழிவில் வெளியாது.


ஒபாமாவின் சொற்பொழிவு:

வரி சலுகை யாருக்கு கொடுக்கவேண்டும் ஒபாமாவாகிய என்னைப்பேன்றவர்களுக்கல்ல அல்லது உலக பெரும்பணக்காரார்களான வாரன்பப்பெட், மைக்ரோ சாப்ட்வேர் பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு அல்ல - வாரன்பப்பெட் என்ற உலக பணக்காரன் அமெரிக்காவில் தன்னுடைய உதவியாளரைவிட குறைவாக வரி செலுத்துகிறார். இது நான் அமெரிக்கா அதிபராவதற்கு முன்பே பல அதிபர்கள் காலத்திலேயே இது வழக்கமாகிவிட்டது. இது நியாயம் இல்லையே, தர்மமும் இல்லை. இது மிகவும் தவறு.

நம்நாடு (அமெரிக்க) எந்த திசையில் பயணிக்க வேண்டும்? நம் முதலீடு எந்தெந்த அம்சங்களில் இருக்க வேண்டும்? அமெரிக்க நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் மனதில் கொண்டு நாம் செயல்படவேண்டிய நேரம் இது.

அமெரிக்க அரசுக்கு என்று சில கடமைகள் இருந்தாலும், நம் நாட்டின் எல்லா பிரச்சனைகளையும் அரசே தீர்க்கமுடியாது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் மக்கள் அரசையே குற்றம் சொல்லி கொண்டிருக்கமுடியாது. அரசு செயல்படுவது மக்களின் வரிபணத்திலிருந்துதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதை கருத்தில் கொண்டு அரசு திறமையாகவும், ஊக்கத்துடனும் செயல்படவேண்டும். அதனால்தான் பல திட்டங்கள் மக்களுக்கு பலன் அளிக்கக்கூடியது அல்ல என்று அறியப்படும்போது அத்திட்டங்களை கைவிட்டு தொழில் முன்னேற்றத்துக்கு உற்பத்தியை பெருக்க உதவும் திட்டங்களைமட்டும் செயல்படுத்த மக்களின் வரிப்பணத்தை உபயோகிக்க முடிவு செய்திருக்கிறோம். குறைந்த செலவுதான் நிறைந்த வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை மனதில் நிறுத்தி அவசியமில்லாத பல செலவுகளைக்குறைக்க முடிவு செய்திருக்கிறோம்.

உலகமே நம் நாட்டை வளர்ந்த பணக்கார நாடு என்று சொல்லப்படும்போது இந்த வளர்ச்சி மேல் மட்டத்தில் உள்ள பல பணக்காரர்களிடமிருந்து வரவில்லை. நம் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம், அடிமட்டத்திலுள்ள பல லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினர் இவர்களின் உறுதியான உழைப்பினால்தான் நாம் பொருளாதார வளர்ச்சியில் இந்த நிலையை அடைந்திருக்கிறோம்.

நம் தாத்தாவும் அவருடைய தாத்தாவுக்கு தாத்தா காலத்திலிருந்தே அனைவரும் அவர்களது உண்மையான உழைப்பின் மூலம் நம் நாட்டின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் மோட்டார் தயாரிப்பு தொழிலின் முன்னோடியாக விளங்கிய ஹென்றி ஃபோர்ட் ஒரு முறை கூறினார். "என்னுடைய தொழிலாளர்களுக்கு நான் வழங்கும் ஊதியம் சரியாக இருந்தால்தான் என் தொழிற்சாலையில் அவர்கள் மூலம் தயாரிக்கும் கார்களை அந்த தொழிலாளர்களே சொந்தமாக தங்கள் சம்பாத்தியத்திலேயே வாங்கமுடியும். இதன்மூலம் வளர்ச்சிப்பாதை விரிவடைய வழி ஏற்படும். தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகாரிக்கும்". இப்படி ஃபோர்ட் அவர்கள் கூறியதை இப்போது நாம் நினைவில் கொள்ளவேண்டும். இப்படி ஒபாமா கூறி முடித்தார்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM