CSI பிஷப் & மனைவிமார்களுக்கு தியான கூட்டம்

CSIயில் உள்ள அனைத்து பிஷப்மார்களுக்கும் அவர்களின் மனைவிமார்களுக்கும் விசேஷ தியான கூடுகை மிஜோராம் மாநிலத்தில் உள்ள Aizawl என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இது மிகச்சிறப்பான ஏற்பாடு ஆகும். அதுவும் தென்னிந்தியாவில் இக்கூட்டம் நடத்தாமல் வடகிழக்கு யூனியன் பிரதேசமான மிஸோராம் என்ற பாஷை தெரியாத மலை பிரதேசங்களில் பிஷப்மார்களை தம்பதிகளாக தனியாக அழைத்து சென்றது அற்புதமான ஏற்பாடு ஆகும். இந்த ஏற்பாடுகளை செய்ய மிஜோராம் பிரஸ்பிட்டீரியன் சபை (Mizoram Presbyterian Church) முன் வந்தது வரவேற்க்கதக்கதாகும். மாடரேட்டர் Most.Rev.G.தேவகடாட்சம் அவர்களுடன் Dr.Wati Longchar, Dean.Sceptre, Dr.Sunil Caleb, Principal, Bishop’s College (Culcutta) ஆகியவர்கள் செய்திகள் பகிர்ந்துக் கொண்டார்கள்.

இந்த நாட்களில் அனைத்து டையோசிஸ்களில் Bishops Council-லும் நடத்தப்பட்டது. வரும் நாட்களில் திருமண்டலத்தில் நடத்தப்பட வேண்டிய மாற்றங்கள், மற்றும் பிஷப்மார்களுக்குள் கருத்துக்கள் பகிர்ந்துக் கொள்ளுதல் நடைப்பெற்றது.

இப்படிப்பட்ட இயற்கை மலைகளும், அடர்ந்த காடுகளும் நிறைந்த இடங்களில் பிஷப்மார் தனிமையாக அமர்ந்து தங்களை தற்பரிசோதனை செய்யவும், தியானிக்கவும், தங்கள் மனைவிமாரோடு தங்கள் திருமண்டலங்களின் ஆவிக்குரிய உயர்வுக்கான வழிகளைக்குறித்து சிந்தித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி சிந்தித்திருந்தால் தியானித்திருந்தால் பிஷப்மார்கள் அங்குபோன மாதிரியே திரும்பி வந்திருக்க முடியாது. ஒரு பெரும் ஆவிக்குரிய மாற்றத்தோடு திருமண்டல முன்னேற்றத்திற்கு பாடுபடும் நோக்கத்துடன் திரும்பியிருப்பார்கள் என்று நம்புவோம்.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்காக CSI சினாட் செய்த ஏற்பாடுகளை பாராட்டுகிறேன். மன உளச்சல்கள் நிறைந்த, டென்ஷன் நிறைந்த பிஷப் பதவி வகிக்கும் அவர்களுக்கு இந்த கூடுகை பெரும் மாற்றத்தையும் பெலத்தையும் நல்ல ஓய்வையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Top





Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM