வாசகர் கடிதம்

வாசகர் கடிதம் 1:

எங்கள் தபால் துறை தவறு செய்திருக்காது:

2012 ஏப்ரல் மாத ஜாமக்காரன் சென்னையிலுள்ள பல வாசகர்களுக்கு ஆயிரக்கணக்கில் கிடைக்காமல்போனது குறித்து வருந்துகிறேன். நானும் தபால்துறையை சேர்ந்தவன்தான். எங்கள் தபால்துறை இப்படிப்பட்ட தவறுகளுக்கு அவ்வளவு சீக்கிரம் துணைப்போகமாட்டார்கள். எப்படித்தான் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்களோ?.

இந்தியாவில் தபால்துறை ஒன்றுதான் சேவை மனப்பான்மையுள்ள டிபார்ட்மெண்ட் ஆகும். ஆனால் எப்படியோ தவறு நடந்துவிட்டது.

.......மதுரை - 16.


வாசகர் கடிதம் 2:

சகோ.தாயப்பன் அவர்களின் CD:

சகோ.தாயப்பன் எழுதிய புத்தகத்தில் சாய்பாபா, பங்காரு அடிகளார் மூலமாகவும் ஒரு மனிதன் வியாதியிலிருந்து, தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம். ஆனால் இவர்களால் யாரையும் மன்னிக்க முடியாது என்று தாயப்பன் அவர்கள் மிகவும் குழப்பமாக எழுதியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது நீங்கள் ஜுன் 2012 மாத ஜாமக்காரனில் சகோ.தாயப்பனின் உபதேச தவறுகளைப்பற்றி எழுதியது மிகவும் சரியே!.

.....................சென்னை.


வாசகர் கடிதம் 3:

ஒளித்துவைத்து அனுப்பினார்களோ?

அரவாணிகளைப்பற்றி நீங்கள் எழுதிய ஏப்ரல் 2012 மாத ஜாமக்காரன் கிடைக்கவில்லை என்று நான் தொலைப்பேசியில் அறிவித்தேன். உங்கள் மனைவி உடனே 2012 ஏப்ரல் மாத ஜாமக்காரனை கூரியரில் எனக்கு அனுப்பிவைத்தார்கள். மிக்க நன்றி. ஆனால் இம்மாதம் ஜுன் 10ம் தேதி தபால்துறை மூலமாகவே நீங்கள் வழமையாக அனுப்பிய அதே 2012 ஏப்ரல் மாத ஜாமக்காரனும் தாமதமாக எனக்கு வந்து சேர்ந்தது என்பதை அறிவிக்கிறேன். ஆகவே நீங்கள் எழுதியதைப்போல் ஏப்ரல் மாத ஜாமக்காரன் அழிக்கப்படவில்லை என்பது என் அபிப்ராயம். ஆனால் ஏப்ரல் மாத ஜாமக்காரன் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து தாமதித்து வந்துசேர்ந்த காரணம் புரியவில்லை. ஒருவேளை ஒளித்துவைத்து அனுப்பினார்களோ? என்னவோ?.

...... திருமதி.அன்னம், சென்னை-88


வாசகர் கடிதம் 4:

நாங்கள் அவ்வளவு கேவலமான காரியங்களை செய்யமாட்டோம்:

எங்கள் சென்னை CSI திருமண்டலத்திலுள்ள சிலர் அரவாணிகளைப்பற்றி நீங்கள் எழுதிய 2012 ஏப்ரல் மாத ஜாமக்காரனை வாசகர்களுக்கு கிடைக்கவிடாமல் தபால்துறையில் சிலரின் உதவியோடு ஆயிரக்கணக்கான ஜாமக்காரன் புத்தகத்தை ஒழித்துவிட்டார்கள் என்று நீங்கள் எழுதிய செய்தி நம்பும்படி இல்லை. அரவாணிகளைப்பற்றிய நீங்கள் எழுதிய 2012 ஏப்ரல் மாத ஜாமக்காரன் எனக்கு கிடைத்ததே! அதை நானும்தான் வாசித்தேன். அதில் அரவாணிகளைப்பற்றி ஒன்றும் பெரிதாக நீங்கள் எழுதிவிடவில்லையே! கேவலம் அந்த விஷயத்துக்காக உங்கள் பத்திரிக்கையை தபால்துறையிலிருந்து எடுத்து அழித்துபோடும் அளவு நாங்கள் (மெட்ராஸ் டையோசிஸ்ஸில் உள்ளவர்கள்) மோசமானவர்கள் அல்ல. சென்னையிலுள்ள எனக்கு ஏப்ரல் 2012 மாத ஜாமக்காரன் கிடைத்தது என்பதை அறிவிக்கிறேன். ஆகவே, இனி இப்படி பொய்யான தகவலைத் தந்து எங்கள் திருமண்டலத்தில் உள்ளவர்களை கேவலப்படுத்தாதீர்கள். இதோடு அப்படி எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

.......சென்னை.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM