சில மாதத்திலேயே புதிய பிரச்சனை உருவானது.
டேவிட்டை கொலை செய்த கூலி படை தலைவன் கோதேஸ்வர ராவ்
K.A.பால்-ஐ பிளாக்மெயில் செய்து டேவிட்டை கொலை செய்ததை தினசரி பேப்பருக்கும் போலீஸ்சுக்கும் தெரிவித்துவிடுவேன் என்று பயமுறுத்தி பலமுறை, பல லட்சங்களை
K.A.பாலிடம் வாங்கியவாறே இருந்தான். கொலைகாரன் எல்லை மீறிபோய் தனக்கு தீராத தலைவலியாக இருக்கிறான். தன் நிம்மதியை கெடுக்கிறான். ஆகவே இந்த கொலைகாரனை கூலிபடை தலைவனான
கோதேஸ்வர ராவையும் இரகசியமாய் கொலை செய்ய வழி தேடினான். இம்முறை கூலி படை உதவியை நாடாமல் தந்திரமாய் போலீஸை கொண்டே
என்கவுன்டர் என்று சினிமாவில் கேள்விபடுவாமே அந்தமுறையில் கொலை செய்துவிட தன் அபார மூளையை உபயோகித்தான்.
மிகப்பெரிய உலக பிரசித்தப்பெற்ற சுகமளிக்கும் ஊழியம் செய்பவன், ஒரு
பொய்யை மறைக்க மற்றொரு பொய் - ஒரு கொலையை மறைக்க -
மற்றொரு கொலை.
இப்படியாக தன் கிறிஸ்த ஊழியத்தின் மத்தியில், பல கொலைகளை செய்யும் திட்டங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போது
K.A.பால் ஜெபம் செய்தால், ஜனங்கள் விழுகிறார்கள், பிசாசுகள் ஓடுகின்றன, வியாதிகள் சுகமானது என்று மேடையேறி சாட்சி கூறும் கூட்டத்தின் காட்சிகளும், சினிமா காட்சிப்போல்
ஓடிக்கொண்டிருக்கின்றன.
K.A.பாலுக்கு போலீஸ் வட்டாரத்தில் தனி மரியாதை உண்டு. பெரிய பெரிய உயர்போலீஸ் அதிகாரிகள் பலர் அடிக்கடி
K.A.பால் வீட்டுக்கு விருந்திலும், களி ஆட்டத்திலும் பங்குகொண்டு
K.A.பாலும் மிக நெருங்கிய நண்பர்களானார்கள். அந்த நட்பை கொலை செய்ய பயன்படுத்த திட்டமிட்டான். போலீஸ்துறையின் மாநிலத்திலேயே மிக உயர்ந்த தலைமை பதவியில் உள்ள அதிகாரியிடம் தனக்கு பிளாக்மெயில் செய்து தொல்லை கொடுக்கும் கோதேஸ்வர ராவை தப்பி ஓடும்போது சுடப்பட்டு மரித்தான் என்று பேப்பரில் வாசிப்போமே, அதுபோல்
என்கவுன்டரில் சுட்டு தன்னை இந்த பிரச்சனையிலிருந்து விடுவிக்க
பல கோடிகளை கொலைக்கு விலையாக பேரம் பேசினான். அந்த உயர் அதிகாரியும் பேசிய அந்த கோடிகளை கொண்டுவந்து கொடுக்கும் இடம், நேரம், நாள் இவைகள் தீர்மானிக்கப்பட்டது. இவைகளை குறிப்பிட்டு
வீடியோக்களை இரகசியமாக அமைத்து பல போலீஸ்களை யூனிபார்ம் இல்லாமல் வர ஏற்பாடு செய்து கையும் களவுமாக சகல ஆதாரத்துடனும் பணத்தோடு பிடித்து கைது செய்தார்.
அதற்குமுன் அந்த கோடி எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதை
K.A.பால் வாயால் பேசவைத்து பணத்தொகை எத்தனை பெட்டியில் உண்டு என்பதையும்
K.A.பால் வாயாலேயே வரவழைத்து அத்தனையம் வீடியோவில் பதிய வைத்து சாட்சியுடன் போலீஸ் வலையில் அகப்படவைத்தார் அந்த உயர் போலீஸ் அதிகாரி.
இந்த செய்தியை ஆந்திராவில் துப்பறியும் செய்தியைப்போல பல பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களும்,
CSI பாஸ்டர்களும் கதைகதையாக பேசிக்கொள்கிறார்கள்.
முதலில்
இன்டர்நெட்டில் K.A.பால் பிடிபடுவதை பேரம் பேசுவதை, கைது செய்யப்படுவதை காட்டினார்கள். அதன்பின் ராஜ் டிவியில் அப்படியே சினிமாபோல பேசும் பேசுவது, பணம் ஒப்படைப்பது போலீஸ் வந்து கைது செய்து ஜீப்பில் ஏற்றுவது அத்தனையும் காட்டப்பட்டது என்பதை அறியும்போது இனி போலீஸ் விசாரணையில்
K.A.பால் இன்னும் எத்தனை கொலைகள் செய்தான் என்பதும் வெளிவரும்போது கிறிஸ்தவ உலகம் மகா பெரிய அதிர்ச்சிக்குள்ளாகும். மட்டுமல்ல, பெரிய தலைக்குனிவும் உண்டாகும்.
கோடிகள் ரூபாய்க்கு மயங்காத அந்த உயர் போலீஸ் அதிகாரியை பாராட்டுகிறேன்.
K.A.பால் என்ற இவ்வளவு பிரசித்தி பெற்ற ஊழியரை தமிழ்நாடு, கேரளா கிறிஸ்தவ மக்கள் அதிகம் அறியவில்லை. ஆனால்
ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா மற்றும் வடமாநில கிறிஸ்தவர்களிடையே இவர் மிக பிரசித்தமானவர்.
தமிழ்நாட்டிலும் சில
பெரிய ஸ்டார் ஊழியர்கள், சுகமளிக்கும், தீர்க்கதரிசனம் கூறும், பொய்யாய் ஜெபத்தில் பெயர்களை கூறும் கோடீஸ்வர ஊழியர்களின் இரகசியங்களும், இரகசிய கொலைகளும் கொஞ்ச கொஞ்சமாக கசிய தொடங்கியுள்ளன. இவர்களெல்லாம் எப்போது அகப்படபோகிறார்களோ?.
இதை வாசிக்கும் வாசகர்கள் பலர் கூற கேட்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இவருக்கு இவ்வளவு கூட்டம் கூடுமா? இத்தனை பேர் மேடையேறி சாட்சி சொல்வார்களா? சாட்சி கூறியவர்களின் புகைப்படம் பத்திரிக்கையில் கண்டோமே! என்றார்கள்.
K.A.பால் கூட்டம் இந்தியாவில் யாருக்கும் வராத கூட்டம் கூடியதே! பல
மாநில முதல்வர்கள் மந்திரிகள்,
MPமார்கள் தலைமையில் நடந்ததே! சொந்த சகோதரனை சொத்து பிரிக்க சொன்ன ஒரே காரணத்துக்காக கொலை செய்த
இரத்தம் படிந்த கையுடன்தானே இவர் கூட்டத்தில் ஜெபம் செய்தார்!, பலர் சுகம் ஆனார்கள்!, பலருடைய பெயர்களை கூறினார், பிசாசுகள் ஓடின!.
எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ! ஒருநாள் கண்டிப்பாக வெளிவரும். வெளியே வந்தே தீரும்.
இப்படிப்பட்ட
போலி ஊழியர்களைக்குறித்து பரிசுத்த வேதம் நமக்கு விளக்கமாக எழுதியுள்ளது. எனவே
போலி ஊழியர்கள் குறிப்பாக சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்தும் ஊழியர்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்போம்.
இவர்களுக்காக, இவர் மூலமாக தேவ நாமம் தூஷிக்கப்பட்டுவிடகூடாது என்று ஜெபிப்போமா? கடைசி காலத்தில் இது எல்லாம் நடக்கும். ஜெபிப்போம்.
|