அரவாணி(அலி-திருநங்கை)களின் இக்கட்டான நிலை

  அரவாணிகள் ஆயராக வந்தால் வரும் இக்கட்டான நிலையைக்குறித்து பிஷப்மாரும், ஆயர்களும், இவர்களை ஆதாரிப்போரும் யோசிப்பதில்லை.

இவர்கள் ஆயரானால் சபை ஜனங்கள் இவர்களை என்ன? என்று அழைப்பார்கள்? பாஸ்டர் அம்மா அல்லது ஐயர் அம்மா என்றா? பாஸ்டர் என்றா?

  பல இடத்தில் குறிப்பாக கிறிஸ்தவ சபைகளில் அரவாணிகளால் ஏற்பட்ட பிரச்சனைக்கு முக்கிய காரணம், அவர்கள் பெண்ணாக வாழ விரும்பினால் மாற்றவேண்டிய பிறப்பு உறுப்பை ஆப்ரேஷன் செய்து மாற்றாமல், பெண்கள் உபயோகிக்கும் கழிவறையை உபயோகித்ததால்தான் சில இடங்களில் சபை மக்களிடையே குறிப்பாக வாலிப பெண்களிடையே பிரச்சனைகள் எழும்பியது.

  இவர்கள் ஆராதனை முடிந்தபின் சிறுநீர்கழிக்ககூட, கழிப்பிடம் செல்வதில் பெரும்சிக்கல் உண்டானதே! இவர்கள் பெண் உடையை உடுத்திக்கொண்டு, ஆண்கள் பகுதி கழிப்பிடம் செல்ல இவர்கள் தயங்குவார்கள்? இவர்கள் தான் ஒரு பெண் தன்மை உள்ளவர் என்று கருதினாலும் தங்கள் பிறப்பு உறுப்பை ஆப்ரேஷன் செய்துகொள்ளாததால் பெண்கள்பகுதி கழிப்பிடம் செல்லவும் தயங்குவார்கள். இப்படி ஒரு பிரச்சனை சம்பவித்ததை கற்பனையிலாவது சபை தலைவர்கள் யோசித்திருக்கலாமே!

  அரவாணி (அலி-திருநங்கை) என்பவர்கள் பெண் உணர்ச்சி உள்ளவராக இருக்கலாம். ஆனால், அவர்களின் ஆண் உறுப்பு அப்படியேதான் இருக்கும்.

  நம் இஷ்டத்துக்கு உலக நாடுகளில் அரவாணிகள் ஆப்ரேஷன் செய்துகொள்வதுபோல் இந்தியாவில் உடனே ஆப்ரேஷன் செய்ய இயலாது. அதற்கு சில ஒழுங்குமுறை இருக்கிறது. சட்டப்படியான அனுமதியில்லாமல் எல்லா டாக்டர்களும் அந்த ஆப்ரேஷனை இந்தியாவில் செய்யக்கூடாது. அந்த விஷயத்தைக்குறித்து இப்போது இந்தியாவில் நீதிமன்றத்தில் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

  2012 மார்ச் மாதம் 10ம் தேதி அரவாணிகளுக்காக பாடுபட்டுவரும் தொண்டு நிறுவனமான N.G.O என்று அழைக்கப்படும் நிறுவனம் பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அரவாணிகள் தங்கள் சிறுநீர் உறுப்பு அறுவைசிகிச்சை செய்ய அவர்களாகவே முன்வருவார்களேயானால் அந்த அரவாணிகளுக்கு எந்த நேரத்திலும் உடனே அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த அரவாணிகளின் மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி.மொகிஷ் ஷா, நீதிபதி.R.V.மோரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச்முன் விசாரணைக்கு வந்தது.

ஒரு அரவாணி தன் சிறுநீர் உறுப்பை ஆப்ரேஷன் செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. 3 அதிகாரம் பெற்ற டாக்டர்கள் தீர்மானித்து, முடிவுசெய்து சம்மதித்த பின்னர்தான் அவர்கள் முன்னிலையில் ஒரு டீம் ஒர்க்காக அந்த ஆப்ரேஷன் நடத்தலாம். 1). மனோதத்துவ டாக்டர், 2). சிறுநீரக சிகிச்சை சிறப்பு மருத்துவர், 3). ஆப்ரேஷன் செய்யும் MS படித்த சிறப்பு டாக்டர் ஆகிய மூன்றுபேர் முன்னிலையில் அவர்களின் ஒப்புதலோடு இந்த ஆப்ரேஷன் நடைபெறவேண்டும். இந்த குறிப்பிட்ட ஆப்ரேஷனுக்கே நீதிமன்றம்(இன்றுவரை 2012 மார்ச் 22 வரை) இன்னும் முடிவு கூறாமல் வழக்கை தள்ளிவைத்து கொண்டிருக்கிறார்கள்.

  இப்படிப்பட்ட சட்ட பிரச்சனைகளையெல்லாம், மேலும் சரீர ஆண் உறுப்புகள் நீக்கப்படாத முக்கிய பிரச்சனைகளையெல்லாம் உதாசீனப்படுத்திக்கொண்டு சென்னை CSI பிஷப் அவர்கள் ஒரு அரவாணியை சபை ஆயராக்கினால், பல சட்டப் பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டிவரும்.

  தங்கள் ஆயர் ஒரு அரவாணி என்று சபை மக்கள் புரிந்துக்கொண்டு அவர் நடத்தும் ஆராதனைக்கு ஆராதிக்க சபைக்கு மக்கள் வந்தால் அன்று அந்த அரவாணி (அலி-திருநங்கை) ஆராதனை நடத்தினால், அங்கு அமர்ந்திருக்கும் வாலிப பெண்கள், வாலிப ஆண்கள், மற்ற சபை ஜனங்கள் யாரும் அவர் நடத்தும் அந்த ஆராதனையை கவனிக்கமாட்டார்கள்! பரிசுத்த சிந்தனைகளை மறந்து மனதில் அரவாணியின் சரீர தன்மைகளைப்பற்றியே கற்பனையில் சிந்தித்து அந்த முழு சபையும் அந்த குறிப்பிட்ட சிந்தனையிலேயே களங்கப்பட்டு கிடக்குமே! இதை சென்னை பிஷப்பும் - ஆயர்களும் மற்ற கமிட்டி அங்கத்தினர்களும் சிந்தித்து பார்க்கவேண்டாமா?

  சென்னை CSI திருமண்டலத்தில் பெண்கள் ஐக்கிய சங்கம் இதைக்குறித்து கேள்வி கேட்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இந்த வேத வசன முறைக்கேட்டை சபை பெண்கள் சம்மதிக்கிறார்களா? அல்லது எதிர்க்கிறார்களா?

பிஷப் தேவசகாயம்

  ஏற்கனவே சென்னை CSI பிஷப்.தேவசகாயம் அவர்களைப்பற்றி பள்ளி ஆசிரியைகள், குருமார்களின் மனைவிமார்கள், பெண் ஆயர் ஆகியவர்கள் சில வருடமாக பிஷப் அவர்கள் தங்களை SEX-டார்ச்சர் செய்வதாக புகார்கள் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. CSI சினாடும் பிஷப்பைப்பற்றிய அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருக்கிறது என்கிறார்கள். மற்றொரு பக்கம் பிஷப்மீது பண ஊழல் வழக்குகளும், கிரிமினல் வழக்குகளும் ஏராளம். இப்படி பல குற்றசாட்டுகளைப்பற்றி சில வாராந்திர பத்திரிக்கை, தினசரி பத்திரிக்கைகளிலும், மேலும் பல இணையதளங்களிலும் பிஷப்புக்கு எதிராக பல மோசமான விஷயங்களைக்குறித்து தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட திருமணமான இரண்டு பெண் ஆசிரியைகள் எழுதி கொடுத்ததாக கூறப்படும் புகார்கள் மீதும் பிஷப் மீதுள்ள பழைய பண ஊழல்கள் மீதும், புதிய மாடரேட்டர் Most Rev.தேவகடாட்சம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்றும் சென்னை CSI திருமண்டலத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை பிஷப் தன்னைக் காப்பாற்ற வழக்கமாக உபயோகிக்கும் ஒரு ஆயுதம் வைத்துள்ளார். தான் ஒரு தலித் இனத்தை சேர்ந்தவன். அதனால்தான் மாடரேட்டர் எலக்ஷனில் என்னை தோற்கடித்தார்கள். அதோடு என்மேல் SEX குற்றச்சாட்டுகளும் வேண்டுமென்றே கூறி என்னை அவமானப்படுத்தபார்க்கிறார்கள் என்ற அந்த ஜாதி ஆயுதத்தை அடிக்கடி உபயோகிக்கிறார் என்கிறார்கள். ஆனால் பிஷப் அவர்கள் நான் ஒரு தலித் என்று கூறும் ஆயுதம் இனி எடுபடாது!

  அரவாணியை ஒரு சபைக்கு ஆயராக்கியதில் உலகத்தில் முதல் பிஷப் நான்தான் (சென்னை CSI திருமண்டலம்) என்ற ஆபாச புகழ் உலக அரங்கிலும், WCC-யிலும் வரவேண்டும் என்பது இவர் எதிர்பார்ப்பு என்கிறார்கள். அரவாணியை ஆயர் ஆக்கியது உலகிலேயே முதல் CSI திருமண்டலம் சென்னை CSI திருமண்டலம்தான் என்ற கெட்ட ஆபாச பெயரை திருமண்டலத்திற்கு வாங்கித்தரும் பிஷப் அவர்களின் இந்த தவறான செயலுக்கு சென்னை திருமண்டல மக்கள் துணை போகவேண்டாம்.

  சென்னை CSI பிஷப் அவர்களை ஊக்குவிக்க ஆஸ்ட்ரேலியாவில் அரவாணிகள் மத்தியில் ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் Rev.தானியேல் பால்ராஜ் அவர்களின் ஆலோசனைகள் பிஷப்புக்கு பக்கபலமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

  கேரளாவில் தெற்கு கேரளா CSI டையோசிஸ்ஸில் இனி பெண்களை ஆயராக அபிஷேகம் செய்வதில்லை என்ற நல்ல தீர்மானம் எடுத்துள்ள செய்தியை கேள்விப்பட்டு தேவனை துதிக்கிறேன். தீர்மானம் எடுத்த தெற்கு கேரளா CSI பிஷப் அவர்களையும், திருமண்டல பொறுப்பாளர்களையும் பாராட்டுகிறேன். இப்படி ஒரு பக்கம் நல்ல மாற்றங்கள் CSI சபைகளில் உருவாகும்போது அரவாணிகளை ஆயர் ஆக்குவதைக்குறித்து சென்னை CSI பிஷப் அவர்களும், CSI மாடரேட்டர் அவர்களும் மறுபரிசீலனை செய்து அதை தடுத்து நிறுவத்துவார்களாக! அப்படி இதை தடுக்கவிட்டால் ஆண் புணர்ச்சிக்காரரான ஒரு ஆணை திருமணம் செய்து அவரை ஆயராக்கி, நம் CSI சபைகளில் ஆராதனை நடத்தும் கேவலம் நிச்சயம் நிறைவேறும். பல நாடுகளில் சபைகளில் அதை சட்டமாக்கி செயல்படுத்தவும் தொடங்கிவிட்டனர். அது நம் இந்தியாவில் ஆரம்பித்துவிடாதபடி இருக்க செயல்படுங்கள். ஜெபியுங்கள் நன்றி.


CSI சபை மக்களுக்கு ஓர் அறிவிப்பு:

  அரவாணி(அலி)யை ஆயர் ஆக்கும் ஏற்பாடுகளுக்கு சென்னை CSI திருமண்டல ஆயர்கள், சபை கமிட்டியினர், பெண்கள் ஐக்கிய சங்கம் ஆகிய யாவரும் தங்கள் எதிர்ப்பினை தனி கடிதம்மூலம் பிஷப்புக்கும், சினாடுக்கும் எழுதி பதிவு செய்யுங்கள்.

  அப்படியே அனைத்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய CSI டையோசிஸ்களில் உள்ள அனைத்து CSI சபையில் உள்ள கமிட்டியினரும், ஆயர்களும், பிஷப்மாரும் அரவாணியை ஆயர் ஆக்குவதை எதிர்ப்பதாக கமிட்டியில் தீர்மானம் செய்து மினிட்ஸ்ஸில் எழுதி பதிவு செய்து சினாடுக்கும், சென்னை பிஷப்புக்கும் எழுதி அனுப்புங்கள்.

  CSI சபையில் அங்கத்தினராக உள்ளவர்கள் யாராக இருந்தாலும் உங்கள் தனிப்பட்ட கடிதம்மூலம், இந்த அரவாணி திட்டத்துக்கு உங்கள் தனிப்பட்ட எதிர்ப்பை கடிதம்மூலம் தெரியப்படுத்தி கர்த்தரை சந்தோஷப்படுத்துங்கள். கர்த்தரின் வசனத்தை கனப்படுத்தி கையாளுங்கள்.

  அரவாணி CSIக்குள் நுழைந்தால் அடுத்தது, ஆணுக்கு-ஆண், பெண்ணுக்கு-பெண் திருமணம் CSI சபையில் நடக்கும். அதன்பின் CSI சபையில் ஹோமோ செக்ஸ் ஆயர் சபையை நடத்துவார். இது ஆபாசமாக தெரியவில்லை!

  வெளிநாட்டில் வாழும் CSI சபையினர் நீங்கள் எந்த டையோசிஸ்ஸை சேர்ந்தவர்களானாலும் அரவாணியை ஆயராக அபிஷேகிக்கப்படுவதை எதிர்ப்பதாக கடிதம் மூலம், இ-மெயில் மூலம் CSI சினாடுக்கும், மாடரேட்டருக்கும் தெரியப்படுத்தவும்.

CSI சினாட் ஆபீஸ் இ-மெயில்: [email protected]
CSI சினாட் விலாசம்: CSI MODERATOR (or)
                                         General Secretary,
                                         CSI Synod, CSI Centre,
                                         5, Whites Road, Royapettah, CHENNAI - 600 014.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM