|
|
|
அமெரிக்கா - ஜெர்மனி - பிரான்ஸ்
வெளிநாட்டு
ஊழியங்கள் |
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பாரீஸ் ஆகிய
நாடுகளுக்கு ஒரு மாத கால ஊழிய பயணமாக தமிழ், மலையாள மொழி பேசும்
மக்களுக்காக தேதி கொடுத்து அங்கு சென்று கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி
முடித்து மீண்டும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளேன். கர்த்தருக்கே
ஸ்தோத்திரம். எந்தவொரு பெலவீனமும் இல்லாமல் சுகபெலத்துடன் கர்த்தர்
என்னை வழி நடத்தினார். கர்த்தருக்கே ஸ்தோத்திரம், அவருக்கே மகிமை
உண்டவதாக.
|
அமெரிக்காவில் என் ஊழியங்கள் |
இம்முறை வழமையாக அமெரிக்கா ஊழியம் என்றால் குறைந்த பட்சம் 8 அல்லது 10 மாநிலங்களில் கூட்டம் நடத்த தேதி கொடுத்து ஊழியம் நடத்தி திரும்புவேன். ஆனால் இம்முறை
சிக்காக்கோ மாநில தமிழ் சபை மக்கள் வசனத்தை ஆழமாக அறியவேண்டி என்னை தங்கள் சபையில் முழுபகல் வேதபாடம் நடத்த சபை மக்களும், சபை மேய்ப்பனும் வேண்டிக்கொண்டனர். இவர்கள் என் பிரயாண முழுசெலவையும் அனுப்பி அழைத்ததால் இவர்களுக்காக மட்டும் செல்ல வேண்டி அமெரிக்காவுக்கு பயணமானேன். அங்கு இந்த சபை மக்களுக்குமட்டும் வேதபாடம் நடத்தி அவர்களுடைய வேத அறிவை தெளிவாக்கினேன். இவர்கள் வேத வசனத்தை கேட்டவிதம் என்னை மிகவும் ஆச்சரியப்படவைத்தன. கர்த்தர் இன்னும் ஒரு கூட்ட மக்களை வசனத்துக்காக வைத்திருக்கிறார். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்.
இந்த சிக்காக்கோ மாநில தமிழ்சபையில்
Rev.Godwin குருவானவர்களும், சபை பொறுப்பாளர்களும் மிக ஜெபத்தோடு ஒருவார கூட்டம் ஒழுங்கு செய்திருந்தார்கள். கூட்டங்கள் அனைத்தும் மிக ஆசீர்வாதத்துடன் அமைந்தது.
|
Tamil United Church of Christ(CHICAGO)ல்
நடந்த தியான கூட்டங்கள் |
படத்தில்
Rev.Godwin அவர்களும், நானும், சபை மக்களும்
|
மலையாள பாஷை கூட்டம்
சிக்காகோ நகரில் உள்ள CHRIST CHURCH-ல்
நடந்த கூட்டம் |
Rev.M.BOSS அவர்கள் இக்கூட்டங்களை நன்றாக ஏற்பாடு செய்திருந்தார். கடந்த முறை 2009ல் இவர்களின் மலையாள சபையின் அழைப்பை ஏற்று 3 நாட்கள் இவர்களுக்காக தொடர்ந்து இவர்களின் சபை கூட்டங்களில் மட்டும் பேசினேன். இம்முறை சிக்காகோ தமிழ் சபையினர் அழைப்பு பெற்று அவர்களுக்கு மட்டும் அமெரிக்கா வந்ததால் மலையாள சபைக்கு அதிக நாட்கள் கொடுக்க முடியவில்லை என்றாலும் ஒருநாள் மட்டும் சிக்காகோ மலையாள சபை கூட்டங்களில் பேசினேன்.
|
(USA) ORIGAN மாநில கூட்டங்கள் |
|
|
அமெரிக்காவின் மேற்கு கடைகோடி வடக்கு மாகாணங்களில் ஒன்றான
Origan மாநிலத்தில் உள்ள
Portland-ல் உள்ள
India International Church என்ற சபையில் கூடும் இந்தியர்களுக்காக இக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. குறிப்பாக மலையாளம்-தமிழ் மக்களை ஒன்றாக இணைத்து இக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட மூக்குபீறி
CSI சபை அங்கத்தினரான
Prof.Dr.Devadoss அவர்களின் பெரும் முயற்சியால் இக்கூட்டங்கள் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தன. இச்சபையின் தலைமை போதகர்
Rev.Dr.Martin Alphonse, உதவி போதகர்
Rev.Dr.Maloote Mathews, உடன் ஊழியர்
Rev.Sudanan D Fredrick அவர்களும் கூட்ட ஏற்பாடுகளை செய்து இருந்தனர். கூட்டங்கள் யாவும் ஆசீர்வாதமாக அமைந்தது.
கூட்டம் நடந்து முடிந்தவுடன் பிரசங்கித்த என்னை விட்டுவிட்டு கூட்ட ஏற்பாடுக்கு காரணமான
Dr.Devadoss அவர்களை பார்த்து டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் இங்கு வர காரணமான உங்களுக்குத்தான் நாங்கள் நன்றி கூறவேண்டும். எங்களுக்காகவே கர்த்தர் டாக்டர் அவர்களை இந்த ஆலயத்தில் பேச வைத்தார். பல புது ஆவிக்குரிய விஷயங்களை வேத வசன மூலமாக நாங்கள் அறியமுடிந்தது என்றார்கள். இப்படியாக கர்த்தர் இக்கூட்டங்களை ஆசீர்வதித்தார்.
|
ஜெர்மனியில் என் கூட்டங்கள் |
அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் ஜெர்மனியில் உள்ள
FRANKFURT தமிழ் சபையில் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இவர்களும் வசனத்தைகேட்கும் வாஞ்சையில் காலையிலிருந்து பின்நேரம் இருட்டும்வரை வசனத்தை மணிக்கணக்காக கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும், பிரான்சிலும் வசனத்தைவிட்டு விலகி பரவச ஆராதனையைமட்டும் விரும்பும் பெரும்பாலான சபைகளினிடையே,
வசனத்தைமட்டும் விரும்பும் இப்படிப்பட்ட மக்களை இன்னும் கர்த்தர் ஆங்காங்கே வைத்துள்ளதை அறிந்து தேவனைத் துதிக்கிறேன்.
|
|
|
அன்று நான் பிரசங்கித்த 5 மணி நேரமும் கூட்டத்தில் ஒருவராவது எழுந்துபோகாமல் மிக கவனமாக நான் கூறின வசனக்குறிப்புகளை எடுத்து எழுதிக்கொண்டே அவர்கள் பிரசங்கத்தை கவனித்தவிதம் கண்டு ஆச்சரியப்பட்டேன், தேவனைத் துதித்தேன். இக்கூட்டங்களை
சகோ.ஸ்டேபானோஸ் அவர்கள் மிக அருமையாக திட்டமிட்டு, ஜெபித்து பல்வேறு இடங்களில் விளம்பரம் செய்து மக்களை கூட்டிச்சேர்த்து அவர்களுக்கு
காலை-மதியம்-இரவு ஆகிய நேரங்களில் அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்து நேர்த்தியாக கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார். ஜெர்மனியில் மற்ற மாநிலங்களுக்கோ, மாவட்டத்துக்கோ கூட்டம் நடத்த தேதிகள் இல்லாததால் 500, 600 மைல் தொலைவில் இருந்ததெல்லாம் வாசகர்கள் குடும்பத்துடன் பிரயாணம் செய்து இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். கர்த்தருடைய நாமத்துக்கு துதியும் கனமும் உண்டாவதாக.
|
|
|
ஜெர்மனியில் 1984ம் ஆண்டு முதல் இலங்கை அகதிகளாக வந்த மக்களை சந்தித்த
சுமார் 27,000 பேர்களில் என் கூட்டத்தில் மனந்திரும்பின இயேசுவை
இரட்சகராக ஏற்றுக்கொண்ட சுமார் 1000 பேர்களில் சகோ.ஸ்டேபானோஸ்சும்
ஒருவராவார். இதில் பெரும்பான்மை விசுவாசிகள் பரவச அனுபவத்தை விரும்பி
வசனத்தைவிட்டு விலகிப்போய்விட்டனர். ஆனால் வசனத்தைவிட்டு விலகாத
விசுவாசிகளில் குறிப்பிடத்தக்கவர் சகோ.ஸ்டேபானோஸ்
ஒருவராவார். கர்த்தர் அவரையும் அவர் நடத்தும் சபைமக்களையும் வழுவாதபடி
காத்து ஆசீர்வதிப்பராக ஆமென்.
|
பிரான்ஸில் என் கூட்டங்கள் |
France பெந்தேகோஸ்தே சபை கூட்டங்கள் |
பிரான்ஸில் முதல் கூட்டம்
எகோவா ஷம்மா சபை ஐக்கியத்தினர் கூடிய சிறு கூட்டத்தில் பேசினேன். தம்பி.ஜான்சன் (பாண்டிசேரியை சேர்ந்தவர்) அவர்களும், சபை
Elders-ம் இந்த ஏற்பாட்டை செய்தனர்.
இரண்டாவது கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள பெந்தேகோஸ்தே சபையில் நடைபெற்றது.
சகோ.அகஸ்டின் அவர்கள் பாஸ்டருடன் இணைந்து இந்த கூட்ட ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்திருந்தனர். சபை பாஸ்டர் அவர்கள் இனி ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு இவ்விதமான வேதபாடம் நடத்தி உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இங்கும் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. பிரான்ஸ் சபையில் பேசும் திட்டம் இல்லாமலே வாசகர்களைமட்டும் சந்திக்க சென்றேன். ஆனால் அவர்களோ மிக சிறந்த கூட்ட ஏற்பாட்டை செய்திருந்தனர்.
|
|
|
|
|
|