2011 செப்டம்பர் 26,27ல் சென்னையில் நடந்த SIAGயின்
புதிய தலைவர்கள் தேர்தல் கூட்டத்தில் முன்னாள் பிஷப்பான
பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் நிகழ்த்திய பிரசங்கம்
Pr.ராஜாமணி

SIAG - தென் இந்திய அசம்பளீஸ் ஆப் காட் சபைகளை நினைத்து நம் கர்த்தர் அழ ஆரம்பித்துவிட்டார் என்று பிரசங்கத்தின் தொடக்கத்திலேயே பேசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியுற செய்தது. AOG சபைகளில் துர் உபதேசங்களும், வேத வசனங்களுக்கு துர் வியாக்கியானங்களும் பெருக ஆரம்பித்துவிட்டதுதான் கர்த்தர் அழுகைக்கு காரணம் என்றார். பழுத்த அனுபவம் உள்ள பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் உண்மை அல்லாத விஷயத்தை இத்தனை பகிரங்கமாக கூறமாட்டார்கள். இதற்கெல்லாம் காரணமான AOG சபை பாஸ்டர்களை நினைத்துதான் கர்த்தர் மிகவும் வேதனைப்படுகிறார். இப்படி இடிமேல் இறங்கிய வெளிப்படையான தாக்குதல் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தது.

  மேலே கூறிய விஷயத்துக்கு உதாரணமாக பாஸ்டர் அவர்கள் கூறியதாவது: AOG சபை பாஸ்டர் ஒருவர் இப்படி பிரசங்கித்தார் பேதுருவின் மாமியாருக்கு வந்த காய்ச்சல் சம்பவத்தைக்குறித்து பிரசங்கம் செய்யும்போது, இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது 3 முக்கிய விஷயங்கள் என்றாராம்.

1. பேதுரு, 2. மாமியார், 3. காய்ச்சல்,

  பேதுரு என்றால் யாக்கோபு அல்ல, யோவான் அல்ல, அது பேதுருவேதான் அல்லேலுயா!

  பேதுருவின் மாமியார் என்றால், பேதுருவின் அம்மா அல்ல, பேதுருவின் சகோதரியல்ல, அது மாமியாரேதான். அல்லேலுயா? அல்லேலுயா!

  காய்ச்சல் என்று கதறினால் அது வயிறுவலி அல்ல, கேன்சரும் அல்ல, வாந்தியும் அல்ல, அது காய்ச்சலேதான்! உடனே அல்லேலுயா! அல்லேலுயா!!

  இப்படித்தான் வசன வியாக்கியானம் இல்லாமல் சில பாஸ்டர்கள் பிரசங்கிக்கிறார்கள் என்று தனக்கே உரிய மிமிக்கிரி முறையில் சிலர் பிரசங்கிக்கிற முறையை சுட்டிகாட்டி பேசி காட்டினார். பேசியது கிண்டல் (பகடி) செய்வதுபோல் காணப்பட்டாலும் அது அடிப்படை வேத படிப்பில்லாத, வசன வியாக்கியானம் செய்ய தெரியாத பாஸ்டர்கள் இப்போது AG சபைகளில் நிறைந்துள்ளார்கள் என்பதையே உணர்த்தியது.

  மேலும் அவர் தன் பிரசங்கத்தில் பரிசுத்தாவி நிறைவுபெற்று கீழே விழுபவர்களையும் விட்டு வைக்கவில்லை.

  ஆஸ்ட்ரேலியாவில் ஜெபிக்கவரும் பெண்கள் கீழே விழுந்தால் உடனே இடுப்புக்கு கீழே மூடுவதற்கு நிறை போர்வைகள் சேமித்து தயாராக வைத்திருப்பார்கள். ஸ்கர்ட் உடுத்திய பெண்கள் ஜெபத்தில் விழுந்தால் நம் இந்திய பெண்களைபோல அல்ல அவர்களின் உடை வித்தியாசமானது என்பதை அறிவீர்கள். ஆனால் நம் இந்திய கலாச்சார பெண்களின் உடை பாதுகாப்பானதும், மரியாதையானதுமாகும். ஸ்கர்ட் உடுத்திய வெள்ளைக்கார பெண்கள் ஸ்டேஜில் ஜெபத்தில் விழுந்தால் பார்வையார்களின் கண்களில் குழப்பம் உண்டாகும் என்று அவர் பிரசங்கித்தபோது கூட்டத்தில் கலந்துக் கொண்ட பலர் அருவருப்போடு நெளிந்தார்கள்.

  ஊதினால் விழுவது, ஆவியினால் நிறைந்து சிரிக்கும் பரிசுத்த சிரிப்பைப்பற்றி நன்றாக தாக்கிப் பேசினார். ஆவியில் நிறைந்து நாயைப்போல் குறைத்து சப்தமிடுதல் போன்ற பரிசுத்த ஆவியானவர் பெயரில் நடத்தப்படும் தவறான பரவச உபதேசங்களையும் சாடினார். இப்படிப்பட்டவைகளை நடப்பிக்கும் பிரபல ஊழியர்களையும், பாஸ்டர்களையும் பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் தாக்கி விளாசினார்.

  அப்படியே சபையில் குரூப்பிசம் உண்டாக்கி பிரிவினைகளை உண்டாக்கும் விசுவாசிகளையும், சுட்டிக்காட்டி கடிந்துப்பேசினார்.

  வயதில் மூத்த நல்ல அனுபவமுள்ள பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் தன் சொந்த சபையான AOG சபைகளில் உள்ள தவறுகளை மிகவும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டியது AOG சபை பாஸ்டர்கள், விசுவாசிகளுக்கு நிச்சயம் பிரயோஜனப்படும்.

பாஸ்டர்.ராஜாமணி அவர்களுக்காக தேவனைத் துதிக்கிறேன்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM