"பெண்ணோடு பாலுறவு பண்ணுகிறதுபோல, ஆணோடு பாலுறவு பண்ண வேண்டாம். அது அருவருப்பானது உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே, நான் கர்த்தர்". லேவி 18:21,22.
|
Rt.Rev.Dr.Euyakim Mar Coorilos |
மார்தோமா சபை பிஷப்மார்களில் ஒருவரான
Rt.Rev.Dr.Euyakim Mar Coorilos அவர்கள் ஹோமோ செக்ஸில் (ஆணுடன்-ஆண்) ஈடுபடும்போது கையும் களவுமாக பிடிப்பட்டார். ஏராளமான சிறுவர், பெரிய ஆள் இப்படி பலருடன்
பாவத்தொடர்பு
கொள்வது ஆரம்பம் முதலே குருவானவராக சபையில் ஊழியம் செய்தபோதே இந்த பழக்கம் உண்டு என்று பலர் கூறுகிறார்கள். அதை
பிஷப் பதவி வகித்த பின்னும் அவரால் விடமுடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.
மார்தோமா சபையை சார்ந்த அலுவலகத்தில் பணியாற்றும்
Mr.Samkutty, வயது 38, கேரளாவிலுள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில்
உள்ள
Ranny என்ற ஊரைச் சேர்ந்தவர். மூணாறு என்ற மலைநகரிலுள்ள மார்தோமா
Retreat Centreல் மேனேஜராக பணியாற்றியவர். இவர் இந்த பிஷப் பலமுறை
கோட்டயத்திலுள்ள பிஷப்.Euyakim அவர்கள் தன் வீட்டிலும், ஆரன்முலா என்ற இடத்திலுள்ள
Retreat Centre-லும் தன்னை பலமுறை அவரோடு ஆண் புணர்ச்சி பாவம் செய்ய தன்னை பிஷப் அவர்கள் உபயோகித்தார் என்றும் கூறியுள்ளார். தன் மேல்அதிகாரியான இந்த பிஷப்பின் டார்ச்சர் தாங்கமுடியாமல் இவரைப்பற்றி தலைமை பிஷப்பிடம் பலமுறை புகார் செய்தேன் என்றும் இவர் கூறியுள்ளார். இந்த பிஷப் தன்னை மட்டுமல்லாமல் வேறு பலரையும் தினசரி தன் பாவத்துக்காக அழைத்து உபயோகித்துக்கொண்டதை பலர் அறிந்துள்ளனர். அவர் பிஷப் பதவி வகிப்பதால் அவர்மீது மார்தோமா சபைகளின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இவர் கூறியதாக அறியப்படுகிறது.
ஒரு கட்டத்தில் பிஷப் அவர்களின் பாவகாரியத்துக்காக இட்ட கட்டளைக்கு தான் சம்மதிக்காததால் உண்டான கோபத்தினால்
பிஷப் அவர்கள் என்னை வேலையைவிட்டும் நீக்கினார் என்றும் கூறுகிறார். 2009ம் வருடம்முதல் என்னை பாவக்காரியத்துக்கு உபயோகித்ததைக்குறித்து தலைமை பிஷப்புக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்காததை அறிந்து, வேறு பல ஆண்கள் இந்த பாவத்தில் இவர் மூலமாக விழுந்துப்போவதை உணர்ந்துதான் நான்
போலீஸில் புகார் செய்தேன் என்று கூறுகிறார். ஆனால் போலீஸ்; என் புகாரை எடுக்கதயங்கினார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் நான்
நீதிமன்றம் சென்று முறையிட்டேன். மேலும் பலநபர்கள் போலீஸ்சில் இதேபோன்ற புகார் பிஷப்மீது கூறியதால் இப்போது
கேரளா நீதிமன்றமே தலையிட்டு விசாரணைநடத்தி அறிக்கை சமர்பிக்க போலீஸுக்கு கட்டளையிட்டது. இப்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களின், சாட்சிகள் ஏராளமாக இருப்பதால் விசாரணை முடிய நீண்ட நாட்களானது. ஏறக்குறைய விசாரணை இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது.
பிஷப்மேல் குற்றம்
Cr Pc 377 (Engaging in Unnatural Sex) என்ற தலைப்பின்கீழ்
FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பிஷப் அவர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை நிச்சயம். இந்த விஷயத்தில் பிஷப்மேல் குற்றம் சுமத்திய நபரான
Mr.Samkutty பலமுறை இந்த பாவத்துக்கு இவரே உடந்தையாக இருந்திருக்கிறார் என்பதும் விளங்குகிறது. தன்னை வேலையைவிட்டு நீக்கிய பிறகுதான் இந்த பாவ குற்றச்சாட்டை பிஷப்மேல் இவர் அறிவித்திருக்கிறார். இப்போது இவர் செய்த பாவத்தை இவர் நியாயப்படுத்த முயலுகிறார் என்பது விளங்குகிறது. ஆகவே இவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே! இப்போது பிஷப்
Rt.Rev.Dr.Euyakim Mar Coorilos அவர்களை நீண்டநாள் விடுமுறையில் போகச்சொல்லி மார்தோமா சபை தலைமை கட்டளையிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
|
Most Rt.Rev.Chrysostum |
|
|
Rt.Rev.Dr.Irenaeus |
மார்தோமா தலைமை தன்னை இந்த வழக்கிலிருந்து காப்பாற்றாமல் போனாலோ அல்லது தன்னை தண்டித்தாலோ மார்தோமா தலைமை பிஷப்
Most Rt.Rev.Philipose Mar Chrysostom, Rt.Rev.Dr.Joseph Mar Irenaeus ஆகியவர்கள் கடந்த காலங்களில் செய்த பாவங்களையும், அந்த பாவங்களில் சம்பந்தப்பட்டவர்களையும் பகிரங்கப்படுத்துவேன் என்று பயமுறுத்துவதாக மார்தோமா சபை குருவானவர்கள் பேசிக்கொள்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே
Rt.Rev.Dr.ஐரேனியஸ் பிஷப் அவர்கள்மேல் சிறு பெண்பிள்ளைகளுடனும், குருமார்களின் மனைவியுடனும் பல இடங்களில் இவர் நடத்திய பாவ சம்பவங்களைக்குறித்து மார்தோமா சபை மக்கள் மூலமாக கேள்விப்பட்டதையும், மார்தோமா சபை முக்கிய தலைவர்கள் சிலரிடம் பிஷப்பால்
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் புகார் அறிவித்ததையும், அதைக் குறித்த விவரங்களையும்
நான் ஜாமக்காரனில் வெளியிட்டிருந்தேன். அதன் காரணமாக மார்தோமா சபைகளில் நான்
பிரசங்கிக்கக்கூடாது என்று தலைமை அறிவித்து, என்மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க
ஏற்பாடுகளை செய்தார்கள். அப்படி என்னை கோர்ட்டுக்கு அவர்கள் அழைத்தால் எனக்காக
வக்கீல் யாரையும் நியமிக்காமல் நானே சாட்சிகளோடு சென்று வழக்கை சந்திப்பேன் என்று
நான் அறிவித்தேன். மார்தோமா சபையில் பல விசுவாசிகள் குறிப்பாக
(Gulf) அரேபியாவில் வேலை செய்யும் மார்தோமா சபை குடும்பங்கள், மார்தோமா சபை குருமார்களின் மனைவிமார்கள் எனக்கு உதவியாக சாட்சி சொல்ல தயார் என்று எனக்கு அறிவித்தார்கள். குறிப்பாக
டிசம்பர் மாதங்களில் தங்களை அழைத்தால் சாட்சி சொல்ல இந்தியா வருவதாக தொலைப்பேசியில் என்னுடன் பேசி என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு நன்றி.
மார்தோமா சபைகளில் டாக்டர்களின் ஐக்கியத்திலுள்ள சிலர் என் சார்பில் மார்தோமா சபை தலைமையிடம் வாதாடினார்கள் என்று கேள்விப்பட்டேன். அதனால் என்மேல் தொடுக்க இருந்த மானநஷ்ட வழக்கு கைவிடப்பட்டது என்பதையும் அறிந்தேன்.
மார்தோமா சபையிலுள்ள வாலிபர் பலர் சேர்ந்து பாவம் செய்த அந்த குறிப்பிட்ட பிஷப் பெயரில் அவரைப்பற்றி ஒரு துண்டுப்பிரதி அச்சடித்து
கேரளாவில் கோழஞ்சேரி தலைமை சபையில் வெளியிட்டனர். அந்த துண்டுப்பிரதியின் தலைப்பு
நரி பரலோகம் சென்றாலும் கோழி பிடிப்பதை நிறுத்துமா? என்பதாகும். இந்த துண்டுப்பிரதி மார்தோமா வாலிபர்களே தங்கள் பிஷப்புக்கு எதிராக வெளியிட்டதால் மார்தோமா சபைகளில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. அந்த துண்டுபிரதியை அப்படியே ஜாமக்காரனில் நானும் வெளியிட்டேன்.
பாவத்தில் பிடிக்கப்படும் எந்த பிஷப்மார்களுக்கும் தண்டனை கொடுத்ததாக மார்தோமா சபை சரித்திரத்தில் இல்லை. ஆகவே
மார்தோமா சபையில், சில குருமார்களும், மார்தோமா சபையில் சில டாக்டர்களும், சபையிலுள்ள சில முக்கிய தலைவர்களும் என்னிடம் பேசி இந்த விவகாரத்தை ஜாமக்காரனில் மேலும் எழுதாமல் தயவுசெய்து இத்துடன் நிறுத்தி உதவுங்கள். பிஷப்மாரை சபை மண்டலம் (சினாட்) இதுவரை தண்டித்ததில்லை என்று கேட்டுக்கொண்டார்கள். மார்தோமா சபையிலுள்ள என் வாசகர்களுக்காக, வாசகர்கள் தெரிவித்த செய்தியை அன்று ஜாமக்காரனில் வெளியிட்டேன். அறிவித்தேன் என் வேலை முடிந்தது. அதன்பின் இப்போது
சோதோம் கொமாராவின் பாவத்தை செய்ததாக கூறப்படும் பிஷப் அவர்கள் சபையில் பலரை கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்ற புதிய பாவசெய்தியும், புதிய பிரச்சனையும் வேதனையுள்ள செய்தியாக கடந்த சில வருடங்களாகவே பலர் எனக்கு அறிவித்தார்கள். மார்தோமாசபை தலைமை இந்த பிஷப்புக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவில்லை! சிறுவர்கள், ஆண்கள் பிஷப் அவர்களால் மேலும் கெட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இப்போது இதை அறிவித்தேன். பிஷப் அவர்களின் இந்த பாவப்பிரச்சனையை
நீதிமன்றமே பொறுப்பெடுத்துக்கொண்டதால் இவைகளைக்குறித்து எனக்கு கிடைத்த தகவலை விவரித்து இப்போது நான் எழுதக்கூடாது! மேலும்
சூர்யா டிவியில் கடந்த மாதம் பிஷப் அவர்களின் புகைப்படத்தோடு நான் மேலே எழுதிய பாவசெய்தியையும், பாவத்தையும் பலமுறை போட்டுக்காட்டினார்கள்.
இ-மெயில் மூலம் மார்தோமாசபை மக்களே பலருக்கு இந்த செய்தியை இப்போது அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே நான் என் அபிப்ராயம் எதையும் கூற விரும்பவில்லை.
மார்தோமா பிஷப்
Rt.Rev.Dr.Euyakim Mar Coorilosயைப்பற்றி எனக்கு எழுதியவர்களில் மார்தோமா சபையின்
Trustyயும் ஒருவர் ஆவார். அவர் மிக மனப்பாரத்துடன் பிஷப் அவர்களின் பாவத்தைக்குறித்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் அந்த குறிப்பிட்ட பிஷப் அவர்களை மார்தோமா சபை தெரிந்தெடுக்கும்போது அவர்
குடும்பத்தைப்பற்றிய பின்னணியைப்பற்றி சபையின் தலைமை சரியாக விசாரிக்கவில்லை என்றும், பிஷப் அவர்களின் குடும்பத்தில் பலர் குடிகாரர்களாக இருந்தார்கள் என்றும், பிஷப் அவர்களின் தாயாரின் சகோதரன் ஒருவர்
இந்துமத சன்யாசியாக மாறிவிட்டார் என்றும், அதனால்தான் பிஷப் வாழ்க்கையும் இப்படியானது என்ற அர்த்ததில் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இவருடைய இந்த குறிப்பிட்ட கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை.
ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் நிலை அல்லது ஜாதிபுத்தி என்று கூறும் குற்றச்சாட்டு விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஜாதியோ, குடும்பமோ ஒருவனுடைய சுபாவத்தை நிர்ணியிக்காது. ஒருவன் எந்த குடும்பத்தில் பிறந்தாலும், எந்த ஜாதியில் பிறந்தாலும் வேதவசனப்படி
மனந்திரும்புதலின் அனுபவத்தில் வளர்ந்தால் இயேசுவின் இரத்தம் ஒருவனை கழுவினால் அவன் முற்றிலும் புது சிருஷ்டியாகிறான். அதுமட்டுமல்ல, பழையவை யாவும் ஒழிந்துப்போகிறது என்று நம் வேதம் போதிக்கிறது. அதில்
பழைய பாவம் இயற்கை சுபாவம் ஆகிய எல்லாம் அடங்கும். ஆகவே மார்தோமா சபை பிஷப் தெரிந்தெடுப்பு பிரசித்திப்பெற்ற குடும்பம் (தரவாடு) உயர்ந்த குடும்பம் என்ற அடிப்படையில் இருப்பது சரியல்ல. இந்த பிஷப்
Rt.Rev.Dr.Euyakim Mar Coorilos அவர்களும் குற்றஞ்சாட்டப்பட்ட
தலைமை பிஷப் அவர்களும், அடுத்த உதவி தலைமை பிஷப்பான
மெத்ராப்போலித்தா என்று அழைக்கப்படுபவர்களும் மிக உயர்ந்த குடும்பத்திலிருந்துதான் (தரவாட்டில்)தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்கள்மேல் அந்த காலத்திலிருந்தே கூறப்பட்ட பல தவறான தொடர்புகளைக்குறித்தும், அடுத்த உதவி தலைமை பிஷப் அவர்களைக்குறித்து கண்டுபிடிக்கப்பட்ட பாவசெயல்கள் யாவும் எல்லா மனுஷருக்குள்ளும் உண்டாகும் காம விகாரமும், சரீர பாவமுமாகும். இந்த பெரிய பிஷப்மார்களும் மனுஷர்களே, மனுஷனில் காணப்படும் எல்லா உணர்ச்சிகளும் இவர்களுக்கும் உண்டு. பாவ உணர்ச்சிகள் உண்டாவதில்
உயர்ந்த குடும்பம் - தாழ்ந்த குடும்பம் என்ற பாகுபாடு இதில் இல்லை.
ஆனால் இவர்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பின அனுபவத்தின்
அடிப்படையில் ஊழியத்தில் இறங்கியிருந்தால் இந்த
கெட்ட பெயர்கள் உண்டாக வழியில்லை! ஆகவே முதலில் மார்தோமாவில் பிஷப் அவர்களை தெரிந்தெடுப்பில் மிக உயர்ந்த குடும்பத்திலிருந்து தெரிந்தெடுக்கும் நிலைமாறவேண்டும்! இயேசுகிறிஸ்து தன் சீஷர்களாக தெரிந்தெடுத்தவர்கள் யாவரும் உயர்ந்த ஜாதிக்காரர்கள் அல்ல! அவர்கள் யாவரும் படிப்பறிவில்லாதவர்கள், வெறும் மீன் பிடிப்பவர்கள். இதை மார்தோமா மண்டலத்தில் (சினாட்) உள்ளவர்களும், குருமார்களும் புரிந்துக்கொள்ளவேண்டும்.
கடந்த சில மாதங்களுக்குமுன் 2011 மார்ச் மாதம் மார்தோமா சபைகளுக்கு மேலும் 3 பிஷப்புகளை தெரிந்தெடுக்க
திருவல்லாவில் மண்டலம் (சினாட்) கூடியது. முதல் இரண்டு குருமார்கள் எதிர்ப்பு ஏதும்
இல்லாமல் தெரிந்தெடுக்கப்பட்டனர். முதலில் ஆயரான
Rev.K.V.Varki அவர்களின் பெயரை பிஷப் தெரிந்தெடுப்பில் அறிவித்து இவர்மேல் ஏதாவது குற்றசாட்டுகள் உண்டா? இவரை தெரிந்தெடுக்க கூடாதபடி எதிர்ப்பு கூறுபவர்கள் உண்டா? என்று சினாட்டில் பகிரங்க அறிவிப்பு உண்டானது. உடனே 13 பேர்கள் அந்த ஆயருக்கு எதிராக புகார் அறிவித்தார்கள். நியாயப்படி பிஷப்மார்களும், மண்டலத்தில் (சினாட்டில்) உள்ளவர்களும் அந்த குற்றச்சாட்டை விசாரிக்கவேண்டும் அல்லது அந்த ஆயரை பிஷப்பாக தெரிந்தெடுக்காமல் இருந்திருக்கவேண்டும். ஆனால் 13 பேர்கள் கூறிய எல்லா புகார்களையும் அலட்சியப்படுத்திவிட்டு அதை பொருட்ப்படுத்தாமல் அந்த குறிப்பிட்ட ஆயரே இப்போது புது பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்டார் என்று சினாட்டில் பிஷப்மார் அறிவித்தது என்ன நியாயம்?
ஜனநாயம் இங்கு செத்துப்போனது!
இந்த தேர்தல் நேரத்தில்
CSI, லூத்தரன் சபைகளில் உண்டாவதைப்போல் நிச்சயம் அடிதடி உண்டாகும் என்று முதல்நாளே செய்திகள் வந்தது. தேர்தல் நடக்கும் காம்பவுண்டில்
மார்தோமா சபைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் உலாவிக்கொண்டுருந்தார்கள் என்றும் அவர்கள் ரௌடிகள் என்றும் அதில் பலர் கலர் பனியனும், கைகளில் இரும்பு வளையமும் வைத்துக்கொண்டு திரிந்தார்கள் என்று பலர் அறிவித்தார்கள். தேர்தலுக்கு முதல்நாளே
ஓட்டுபோடும் நபர்களுக்கு பயமுறுத்தல்களும், எச்சரிக்கை வார்த்தைகளும் போன் வழியாக கூறப்பட்டதாம்.
குறிப்பிட்ட நபர்களுக்கு
ஓட்டுபோடாமல் எதிர்ப்புகள் தெரிவித்தால், நிச்சயம் அவர்கள் யாராகயிருந்தாலும் அடிவாங்காமல் வெளியே போகமுடியாது என்றும் அறிவிக்கப்பட்டதாம். உடனே
Prof.மாமச்சன் என்பவர்
பிஷப்.ஐரேனியஸ் மெத்ரோபோலித்தா அவர்களுடன் இவ்விவரம் அறிவித்து அடிதடி உண்டாகாமல் இருக்க எங்களுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டபோது நீங்கள்
குண்டர்கள்மூலம் கிடைப்பதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பதில் கூறியபோது மெத்தப்படித்த அவர் மிகவும் வேதனைப்பட்டாராம். ஒரு பிஷப் இப்படி பதில் கூறுகிறாரே, அப்படியானால்
குண்டர்களை ஏற்பாடு செய்தது யார்? என்பதை சபை விசுவாசிகள் எல்லாரும் புரிந்துக்கொண்டதாக ஒரு துண்டுப்பிரதியில் வெளியிட்டுள்ளார்கள். அந்த
Prof.மாமச்சனை அன்று அவர் பயந்ததைப்போல் ரௌடிகள் அவரை அடித்துப்போட்டார்கள். அவர் எதிர்ப்பார்த்தது நடந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பிஷப்.ஐரேனியஸ் மெத்ரோபோலித்தா என்ற உதவி தலைமை பிஷப் அவர்களுக்கு குருமார்களின் சப்போர்ட் நிறைய உண்டு. இந்த சப்போர்ட் அந்த பிஷப்மேல் உள்ள அன்பினால் ஏற்பட்டதல்ல. அவர் ஒரு சர்வாதிகாரி என்ற பயத்தால் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
நல்ல குடும்பத்தில் பிறந்தவரும்,
மனந்திரும்பின அனுபவமுள்ளவரும், கன்வென்ஷன் பிரசங்கியும்,
குணமாக்கும் வரம் உள்ளவருமான
Rev.Dr.ஆபிரகாம் லிங்கன் என்ற ஆயர் அவர்களை பிஷப் ஆகாமல் இருக்க
மார்தோமா பிஷப்மாரும், சில ஆயரும் சேர்ந்து எப்படியெல்லாம் அந்த பதவி உயர்வை தடுத்தார்கள் என்று அநேக வருடங்களுக்குமுன் கதைகதையாக ஆயர்மார்கள் பலர் என்னிடம் கூறகேட்டேன்.
மார்தோமா சபையில் பெரும்பான்மை மக்கள் ஆபிரகாம் லிங்கன் என்ற ஆயரை பிஷப்பாக்க மிகவும் ஆசைப்பட்டார்கள். ஆன்மீகத்தில் ஆழமான அனுபவமுள்ளவர் பிஷப் ஆகக்கூடாது என்று பிஷப்மார்களே ஆயர்கள்மூலம் உள்ஏற்பாடுகள்
இரகசியமாக செய்து அவரை பிஷப் ஆகாமல் தடுத்துப்போட்டார்கள்
என்று கூறக்கேட்டேன். ஆவிக்குரியவர்களுக்கு கிடைக்கும் மரியாதையைப்
பார்த்தீர்களா?
மார்தோமா சபை
பிஷப்மார்களின் நிலை மிக மோசமாகப்போவதை அறிந்த, மார்தோமா சபையின்மீது உண்மையான பாரம் கொண்ட மார்தோமா சபை மக்கள் பலர் உபவாசம் செய்து
அழுது ஜெபிக்க ஒரு பெரிய ஜெபக்கூட்டத்தை மஞ்ஜாடியில் உள்ள
திருமதி.பொன்னம்மா அவர்கள் வீட்டில் ஏற்பாடு செய்து மார்தோமா சபை விசுவாசிகள் ஜெபித்தார்கள்.
பரிசுத்த குலைச்சலும், நவீன உபதேசங்களும்,
சோதோம் கொமாராவின் பாவங்களும் பல மார்தோமா பிஷப்மார்களிடம் பெருகிவிட்டது என்பதுதான் இப்படிப்பட்ட வேதனையான செய்திகள் மூலம் அறிகிறோம். நல்ல சபை, நல்ல சபைமக்கள், ஆனால் அந்த மார்தோமா சபையில் உள்ள பிஷப்மார்கள் பலர் சபை மக்களுக்கு அவமானம் உண்டாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பிஷப்மார்களின் செய்திகளை, பல வருடங்களுக்குமுன்பே ஜாமக்காரனில் மார்தோமா சபை வாசகர்களுக்காக அறிவித்த என்னை
(Dr.புஷ்பராஜ்) மார்தோமா சபை பிஷப்மார்கள் தங்கள் சபைகளில் பிரசங்கிக்ககூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால் உலகமே பார்க்கும் வண்ணம் புகைப்படத்துடன் தினம்தினம் தொடர்ந்து மார்தோமா சபை பிஷப்மார்களின் பாவ செய்திகளை வெளியிட்ட
சூர்யா
TVயையோ, ஏசியா நெட் கண்ணாடி என்ற சேனலையோ
தடை செய்ய இவர்களால் முடியாது. கர்த்தர் இவைகள் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை.
மார்தோமா சபையில் பல பிஷப்மார்கள் இப்படிப்பட்ட பலவித பாவத்தின் பிடியில் அகப்பட்டிருக்கும்போது சபையில்
பரிசுத்தம் எப்படி வரும்? வாலிபர்களுக்கும், வாலிபப் பெண்களுக்கும் இவர்கள் எப்படி வழி காட்டுவார்கள்?
மார்தோமா சபை பிஷப்மார்களில் பலர் பெண்கள் சம்பந்தமான பாவத்தில் விழுகிறார்கள். ஆண்களோடு-ஆண்கள் சேரும் பாவத்தில் சிலர் விழுகிறார்கள்.
இப்படி இவர்கள் பாவத்தில் விழுந்துக்கிடந்தால் எத்தனை வருடங்கள் தொடர்ந்து இவர்கள்
மாராமன் கன்வென்ஷன்கள்
(MARAMON CONVENTION) நடத்தினாலும் சபை மக்கள், வாலிபப் பிள்ளைகள் எவருக்கும்
உயிர் மீட்சியோ, பரிசுத்தமோ உண்டாகாது.
CSI சபைகளிலோ
பணக்கொள்ளையில் சில பிஷப்மார் விழுந்துக்கொண்டிருக்கிறார்கள்.
மார்தோமா - பெந்தேகோஸ்தே, கத்தோலிக்க சபைகளில் பிஷப்மார்கள்
பலர் பெண்கள் பாவத்தில் விழுந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
யாக்கோபையா - ஆர்த்டாக்ஸ் சபையில் பிஷப்மார்களின் சொத்து சண்டை, சொத்து உரிமை (அவகாசம்) சண்டை
வீதிக்குவந்து உலகமக்கள் வேடிக்கை பார்க்கும் நிலை அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த சபைகளிலெல்லாம் அங்கத்தினர்களாக உள்ள இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் பலர் நாங்கள் இனி எங்குபோய் ஆராதிப்பது? எங்கள் பிள்ளைகளை
பிஷப்மார் பக்கத்தில் அல்லது பாஸ்டர்மார் பக்கத்தில் ஜெபத்துக்காக கொண்டுபோகவே பயமாக இருக்கிறது என்று சிலர் எழுதும்போது! அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? எப்படி ஆறுதல் கூறுவது? எங்கு அவர்களை ஆராதிக்க அனுப்புவது? இதற்கு பதில் கூற முடியாமல் வேதனையுடன் இவ்விவரங்களை கர்த்தரின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.
பத்திரிக்கையில் எழுதாத
பல இரகசியங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. இதற்காக எல்லா சபை வாசகர்களும் பிஷப்மார்களின் இதுபோன்ற பாவ காரியங்கள் இனி தொடர்ந்து நடைபெறாதிருக்க நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் ஜெபியுங்கள். ஜெபிக்கிறேன். இதற்கெல்லாம் ஒருநாள் முடிவு உண்டு. எல்லா சபை விசுவாசிகளும் விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும்.
மார்தோமா சபை பிஷப்மார்கள் இரட்சிக்கப்படவேண்டும்.
CSI சபை பிஷப்மார்கள் இரட்சிக்கப்படவேண்டும்.
கத்தோலிக்க சபை பிஷப்மார்கள் இரட்சிக்கப்படவேண்டும்.
பெந்தேகோஸ்தே சபை தலைவர்கள், பாஸ்டர்கள் இரட்சிக்கப்படவேண்டும்.
யாக்கோபையா - ஆர்த்டாக்ஸ் சபை பிஷப்மார்கள் இரட்சிக்கப்படவேண்டும்.
கத்தோலிக்க சபைகளில் உலக முழுவதும்
ஹோமோ செக்ஸ்ஸிலும், பெண்கள் தொடர்பு பாவங்களிலும் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரம் குருமார்களை ஊழிய பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர். சிலர்
சிறை தண்டனையும் அனுபவகிக்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. (தகவல்:
சூர்யா டிவி). இதை கேட்க எவ்வளவு வேதனையாக இருக்கிறது.
இவர்களோடு
இரட்சிக்கப்பட்டவர்கள், ஜெபவீரர்கள் என்றும் கூறும்
மிஷனரி ஸ்தாபன தலைவர்களும் சென்னையிலும், வெல்லூரிலும், நாகர்கோவிலிலும், கேரளத்திலும், ஆந்திராவிலும் பாவத்தில் விழுந்துவிட்ட செய்திகள் மிஷனரி ஸ்தாபன தலைவர்களின் மகள், மகன் மூலமாக சாட்சி இழந்த செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக நம் செவிகளில் வந்து விழும்போது
பிசாசு எத்தனை வேகமாக செயல்படுகிறான் என்பதை உணர்ந்து விசுவாசிகள் உபவாச ஜெபத்தை தீவிரப்படுத்துங்கள். வேறு என்ன செய்ய? பிசாசை எதிர்க்கும் போர்கருவி நமக்குள்ளது அது ஒன்றேதான். எனவே விசுவாசிகள் எல்லாரும் ஜெபியுங்கள்.
. . . . நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று ஏசாயா 43:12ல் கர்த்தர் மிக எதிர்ப்பார்ப்போடு கூறியுள்ளார். நம் தேவனை நம் மூலமாக, நம் செய்கையின் மூலமாகத்தான் காட்டவேண்டும்என்று தேவன் விரும்புகிறார். புகைப்படமூலமாக அல்லது சிலுவை சின்னம் மூலமாக அல்ல.
|