கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்

கேள்வி:  நாங்கள் கடந்த 10 வருடமாக பாஸ்டர்.பால்தங்கையா சபைக்கு போய் வருகிறோம். நீங்கள் சேலத்தில் இருக்கிறீர்கள். அவரைப்பற்றி எங்களைவிட உங்களுக்கு தெரியுமா? எப்படி அவரைப்பற்றி எழுதலாம்? அவர் மனைவி செய்த தவறுக்கு பாஸ்டர் என்ன செய்வார்?

பதில்:  டெல்லிக்கு நீங்கள் போனதில்லை. பிரதமர் அவர்களை சந்தித்ததும் இல்லை. ஆனால் அவரைப்பற்றி பல விஷயங்களைப்பற்றி அரசியல் விவரங்களைப்பற்றி நீங்கள் பேசும்போது அவர் நல்லவர் என்றெல்லாம் எப்படி கூறமுடிகிறது? உதாரணத்துக்காக இதை கூறுகிறேன். அரசியல் தலைவர்களைப்பற்றி நாம் அறிந்து வைத்தது இப்படித்தான்.

ஆனால் பாஸ்டர்.பால்தங்கையா அவர்களை நீங்கள் 10 வருடமாக தூரத்தில் கூட்டத்தில் ஒருவராக பார்த்து அறிந்துள்ளீர்கள். ஆனால் என்னை போன்றவர்கள் தங்கள் பத்திரிக்கையில் ஒருவரை விமர்சிக்கும்போது எந்த அளவு கவனமாக விசாரித்து அறிந்து ஆதாரத்தை சேகரித்து வைத்துக்கொண்டு எழுதவேண்டும் என்பதையும் நீங்கள் உணரவேண்டும்.

பாஸ்டர்.பால்தங்கையா அவர்களை நீண்ட காலத்துக்குமுன்பே அவர் சொந்த நாடான இலங்கையில் வைத்தே அறிந்தவன் நான். அவருடன் பேசியதாக எனக்கு ஞாபகம் இல்லை. 1965ம் வருடமுதல் இலங்கை மக்களோடு தொடர்புகொண்டவன் நான். முதன்முதல் இலங்கைக்கு 1970ம் ஆண்டு நேரில் சென்று வந்து அதன்பின் அநேகமுறை ஊழியம் காரணமாக இலங்கைக்கு போக்கும் வரத்துமாக இருந்தவன் நான்.

பாஸ்டர்.பால்தங்கையா அவர்கள் படித்த பள்ளி, படித்த வேதாகமப்பள்ளி, ஊழியம் ஆரம்பித்தது, பல பாஸ்டர்களின்கீழ் அவர் ஊழியம் செய்தது ஆகியவையும் அறிந்தவன் நான். இலங்கையில் பாஸ்டர்.அருமைநாயகம் அவர்களும், அவர் குடும்பமும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பாஸ்டர்.அருமைநாயகம்தான் பாஸ்டர்.பால்தங்கையாவை ஊழியத்தில் தூக்கிவிட்டார்.

இலங்கை நாவல்பட்டியா சபையில் பெரிய பாஸ்டரின் கீழ் பாஸ்டர்.பால்தங்கையா அவர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது தலைமை பாஸ்டர் அவர்கள் சில வாரங்கள் வெளிநாடு சென்றபோதுதான் இவர் ஊழியத்தில் முதல் பிரச்சனை எழுந்தது- அது பதவி பிரச்சனை ஆகும். பாஸ்டர் இல்லாத சமயம் அவரை (Acting) Pastorஆக AOG நியமித்தது. ஆனால் இவரோ தன்னை Assistant பாஸ்டராக அழைத்துக்கொண்டார். சீனியர் பாஸ்டர் வந்தவுடன் பிரச்சனை எழுந்தது. சபை மக்களும், பாஸ்டரின் செயல்களை கண்டித்தனர். அதன்பின் நாவலப்பட்டயாவிலிருந்து பால்தங்கையா விரட்டப்பட்டார்.

ஊழிய வாய்ப்பின்றி சில காலம் இவர் இருந்தபோதுதான் Canadaவில் இப்போது மிகப்பெரிய சபைக்கு பாஸ்டராக உள்ள பாஸ்டர்.சாலமோன் அவர்களின் தகப்பனார் பாஸ்டர்.அருமை நாயகம் அவர்கள் பாஸ்டர்.தங்கையாவுக்கு புது வாழ்வளித்தார். Jaffnaவில் ஊழியம் செய்ய தன் சபையையே கொடுத்தார். கடைசியில் சபை ஸ்தாபகரான பாஸ்டர்.அருமைநாயகம் அவர்களையே சபையைவிட்டு விரட்டிவிட்டார். என்றால் நிலைமையை யூகித்துக்கொள்ளுங்கள். மனம்நொந்துபோன நிலையில் பாஸ்டர்.அருமைநாயகம் அவர்கள் கொளும்பு வந்து சேர்ந்த பாஸ்டர்.அருமைநாயகம் அவர்கள் சபையைவிட்டு வெளியேற வேறு காரணமும் உண்டு. அதன்பின் பாஸ்டர்.அருமைநாயகம் மறுபடியும் தேவன் மிக உன்னத நிலைக்கு உயர்த்தினார். அதன்பின் கொஞ்ச காலத்திலேயே பாஸ்டர்.பால்தங்கையாவும் Jaffna சபையிலிருந்து விரட்டப்பட்டார். பால்தங்கையா அவர்கள் நாவலபட்டியாவிலிருந்து - யாழ்பாணம் வந்துசேர்ந்தது முதல் இடைப்பட்ட நாட்களில் அவர் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களையும் நான் அறிவேன். அதன்பின் அவர் இந்தியா வந்துசேர்ந்தார். அவரின் பாடல் தாலந்து, பேச்சுவண்மை யாவும் அவரை பெங்களுரில் மகா உயரத்தில் தூக்கிவிட்டது. பணம் பெருகினது, புகழ்பெருகினது, அதன் காரணமாக சொந்த வாழ்க்கையில் மனைவி - பிள்ளைகள் மத்தியில் சில விஷயங்களில் சாட்சியையும் இழந்தார்.

சபை மக்களுக்கு பாஸ்டர்.பால்தங்கையா அவர்கள் மேடையில் பாடுவது, பேசுவது மட்டும்தான் தெரியும். உள்விஷயங்கள் எதுவும் அறிய நியாயம் இல்லை. அவர் மிகவும் நம்பின அவருக்கு நெருக்கமான இரண்டுபேர் அவரைவிட்டு விலகினார்கள். பாஸ்டரோ, உலகம் சுற்றும் வாலிபனாக மாறினார், பிசாசு உள்ளே நுழைந்தது. முதலில் பாஸ்டர், அதன்பின் பிள்ளைகள், பிறகு மனைவி இப்படியாக விழுகை படிப்படியாக ஏற்பட ஆரம்பித்தது.

பாஸ்டர்.பால்தங்கையாக்கு உண்மையான ஆவிக்குரியவர்களின் நெருக்கம் குறைந்தது. உலக மக்கள், அரசியல் தொடர்புடையவர்கள், கோடீஸ்வரர்கள் ஆகியோர் நெருங்கின தோழனானார்கள்.

அவர் சொந்த வாழ்க்கையில் வந்துவந்துப்போன சோதனைகள், அதிலிருந்து விழுந்து எழுந்தது ஆகியவைகளை மனைவி மட்டுமே அதிகம் அறிவார். குடும்பத்தில் சாட்சி இழந்ததால், குடும்ப தலைவனின் பலவீனத்தை பிள்ளைகள் - மனைவி ஆகியவர்கள் அறிந்தால் முதலில் வீட்டுக்குள்ளே மதிப்பை இழப்பார், பின் சபையின் மூப்பர்களிடம் மதிப்பை இழந்தார்.

எந்த பணக்கார குடும்பத்திலும் குடும்ப தலைவனின் தவறுகள் அவரின் சொந்த மனைவி போலும், அறியாத பல இரகசியங்களையும் பலவீனங்களையும் அறியும் ஒரே நபர் கார் டிரைவர் ஆவார். ஆரம்பத்தில் எல்லா இரகசியங்களையும் மனதில் அடக்கிவைப்பார். பண விஷயத்திலும், அல்லது கண்டிக்க தொடங்கினதால் ஏற்பட்ட கோபம், வெறுப்பு ஆகியவைகள் உண்டானவுடன் டிரைவர் வாயாலேயே பல இரகசியங்கள் வெளியே கசிய தொடங்கும்.

இப்போது ஆவிக்குரிய மாற்றத்துடன் பாஸ்டர்.பால்தங்கையா அவர்களின் மனைவி இப்போது வேதாகம கல்லூரியில் பயின்று கொண்டிருக்கிறார். இனியாவது வசன அடிப்படையில் அந்நியபாஷை பேசாது ஒரு புது வாழ்க்கை தொடங்குவாராக. ஜெபிப்போம்.


கேள்வி:  FMPB-யின் இப்போதைய நிலையைப்பற்றியும், உள் விவகாரங்களைப்பற்றியும் நன்றாக அறிந்த நீங்கள் FMPBயில் ஆரம்பகால ஊழியர்களும், விசுவாசிகளுமான எங்களுக்கு என்ன ஆலோசனை கொடுக்கிறீர்கள்?.

பதில்:  இப்போது FMPB விவகாரங்களையும் வேதனைக்குறிய சம்பவங்களையும் இப்போது பொறுப்பாளர்கள் மிக ஞானமாய் கையாண்டு கொண்டிருக்கிறார்கள், அவர்களை வாழ்த்துகிறேன். FMPBயில் ஒன்மேன் ஷோவுக்கு ஒரு முடிவுண்டாகவேண்டும். உண்மையான FMPBயில் உள்ள தியாகிகள், ஜெப வீரர்களின் ஆலோசனைகளை கேட்க தலைமை முன்வரவேண்டும். அவர்களின் ஆலோசனைகளை அற்பமாக எண்ணக்கூடாது. FMPB ஜெப ஐக்கியத்தினர் இப்போது அவசரமாக செய்யவேண்டியது என்னவென்றால் FMPB தொடங்கிய ஆரம்பகால கட்டத்துக்கு போகவேண்டும். அதற்காக கோவில்பட்டி போகவேண்டும் என்று நான் கூறவில்லை. கண்ணீருள்ள ஜெப ஐக்கியத்தில் ஒன்றுபட்ட அந்த ஆரம்பகால ஜெப ஐக்கியத்துக்கு திரும்பவேண்டும் என்கிறேன். அந்த காலத்தில் ஒரு இடத்தின் ஜெபக்குழு தலைவரை தெரிந்தெடுக்க எத்தனை நாட்கள் பட்டினி கிடந்து அழுது ஜெபித்தார்கள். அந்த ஜெபஆயத்தம் தலைவர்களை தெரிந்தெடுக்கும்போது இப்போது மிகமிக தேவை. வேதம் கூறுகிறபடி தலைவர்களை தேர்ந்தெடுக்கும்முன் இவர்கள் முன்னதாக சோதிக்கப்பட வேண்டும். 1 தீமோ 2:10. இப்போதெல்லாம் FMPB ஒரு தலைவரை தெரிந்தெடுக்க ஒரு சில நிமிடத்தில் முடிவெடுத்து விடுகிறார்கள். விழுகையும்,பிரச்சனையும் அங்குதான் ஆரம்பிக்கிறது.

மறுபடியும் யாவரும் இரட்டுத்துவோம், ஆண்டவரின் காலை பிடித்து அழுவோம், ஸ்தாபனம் பலவீனப்பட்ட இடத்தை கண்டுப்பிடிப்போம், அழுத இடத்துக்கே திரும்புவோம். அதனால்தான் அக்டோபர் மாத ஜாமக்காரனில் மிஷனரி தலைவர்களுக்காக ஜெபிக்க சொல்லி மறைமுகமாக எழுதினேன். தகுதியிழந்தவர்கள், தகுதி இல்லாதவர்களை எந்த ஸ்தானத்திலும் உயர்த்தவோ, எந்த பதவியும் கொடுத்துவிடாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

FMPBயின் பெலமும், வளர்ச்சியும், அஸ்திபாரமும் பணத்தில், காணிக்கையில் சாமர்தியத்தில், தியாகத்திலும் அல்ல, FMPB ஊழியம் ஜெபத்தில் போடப்பட்ட அஸ்திபாரம் ஆகும். அதே இடத்திற்கு திரும்பி வருவோம்.

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் . . . . . . ஆகையால் பெற்றுக்கொண்டவகையை நினைவுகூர்ந்து அதை கைக்கொண்டு மனந்திரும்பு. வெளி 3 அதிகாரம்,

நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும் உன்பேரில் எனக்கு குறை உண்டு. வெளி 2:19,20.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN