கர்த்தருக்குள் அன்பானவர்களே,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் யாவருக்கும் கிறிஸ்து பிறந்த சந்தோஷத்தையும், புதிய வருட
(2012) வாழ்த்துதலையும் கூறிக்கொள்கிறேன்.
வரும் புதிய ஆண்டில் நம் யாவருக்கும், சந்தோஷத்தையும் சமாதானத்தையும், ஆரோக்கியத்தையும் கர்த்தர் அருளுவாராக. வாசகர்கள் யாவருக்கும் என்னை நேசிப்பவர்கள், வெறுப்பவர்கள், காணிக்கை அனுப்பினவர்கள், அனுப்பாதவர்கள் யாவருக்காகவும் விசேஷ ஜெபத்தை ஏறெடுக்கிறோம். வருடத்தின் கடைசி மாதத்தில் கடந்து வந்திருக்கிறோம். கடந்த காலங்களில் கர்த்தர் நமக்கு போதுமானவராகவும், நல்ல மேய்ப்பனாகவும் வழி நடத்தினர். கர்த்தரை நான் துதிக்கிறேன். வரும் ஆண்டும், இனி வரப்போகிற காலங்களிலும் நமக்கு போதுமானவராகவே இருந்து வழி நடத்துவராக. வேதபுத்தகத்திலுள்ள எல்லா வாக்குத்தத்தங்களும் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்களுக்கும் பொருந்துகிறதாகயிருக்கிறது. ஒவ்வொரு புது வருடத்துக்கும் புது வாக்குத்தத்தங்களை கர்த்தர் அருளுவதில்லை. வேதத்திலுள்ள எல்லா வாக்குத்தத்தங்களையும் நமக்கு உரிமையாக்கிக்கொள்வோம்.
CSI மாடரேட்டர் தேர்தலுக்காகவும், பிஷப் எலக்ஷனுக்காகவும் ஜெபிப்போம். மற்ற சபைகளின் தலைவர்களுக்காகவும், பாஸ்டர்மார்களுக்காகவும், மிஷனரிமார்களுக்காகவும், எல்லா ஊழியர்களுக்காகவும், நீதிபதிகள், பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், நாட்டை ஆளுகிறவர்களுக்காகவும் நம் தனி ஜெபங்களில் வேண்டுதல்களை ஏறெடுப்போம்.
கடந்த காலங்களிலும், கடந்த 12 மாதங்களிலும் ஜாமக்காரன் ஊழியத்தை ஜெபத்திலும், காணிக்கையாலும் தாங்கிய எல்லாருக்கும் வாழ்த்துதலை கூறிக்கொள்கிறேன். கடந்த நாட்களில் நான் போய்வந்த ஊர்கள், நாடுகளிலெல்லாம் சந்தித்த ஜாமக்காரன் வாசகர்கள் பலர் ஜாமக்காரனை ஒன்றுசேர்த்து பைண்ட் செய்துவைத்ததை கண்டேன். ஜாமக்காரன் பத்திரிக்கையை வெளியில் எல்லாரும் பார்க்கும்படி தங்கள் வீட்டு முன்அறையில் வைக்க பயந்தவர்கள், தயங்கியவர்கள் இப்போது தைரியமாக எல்லாரும் காணும் வகையில் வைக்க தைரியமும் விழிப்புணர்வும் உண்டாகியிருப்பதை அறியமுடிகிறது. ஒவ்வொரு வாசகர்களும் ஒவ்வொரு ஜாமக்காரனாக திறப்பின் வாசலில் நிற்கிறவர்களாக கர்த்தர் மாற்ற ஜெபிக்கிறேன். கர்த்தர் அனுமதியளித்தால் 2012லும் ஜாமக்காரன் வழியாக உங்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன். கர்த்தரின் கிருபை நம்அனைவரோடும் இப்போதும் எப்போதும் இருப்பதாக. ஆமென்.
|